அமீரக செய்திகள்

இந்த ஆண்டின் மிகவும் குளிரான நாளை பதிவு செய்த அமீரகம்..!! வெப்பநிலை 5.3°C வரை குறைந்ததாக NCM அறிவிப்பு….

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த மாதம் இறுதியில் குளிர்காலம் தொடங்கிய நிலையில், தற்போது நாட்டின் வெப்பநிலை ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்துள்ளது. மேலும், ஜனவரி 10 ஆம் தேதி, ஆண்டின் குளிரான நாள் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டதாக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) அறிவித்துள்ளது.

அன்றைய தினம் ரக்னாவில் (அல் ஐன்) காலை 7.30 மணிக்கு வெப்பநிலை 5.3 ° C வரை குறைந்துள்ளது, இந்த ஆண்டு இதுவரை NCM பதிவு செய்த மிகக் குறைந்த வெப்பநிலை இதுவாகும்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நாட்டின் வெப்பநிலை 10ºCக்கு கீழே குறைந்துள்ளது. குறிப்பாக,  நாட்டின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது ரக்னா இந்த ஆண்டு குளிர்ந்த வெப்பநிலையை பதிவு செய்துள்ளது. இருப்பினும், ஜனவரி 9 ஆம் தேதி, ஜெபல் ஜெய்ஸ் மலையில் வெப்பநிலை 7.2 டிகிரி செல்சியஸ் வரை குறைந்துள்ளது.

இந்நிலையில், வெளிப்புற மற்றும் சாகச ஆர்வலர்கள் ஜெபல் ஜெய்ஸ் மலைகளை சூழ்ந்த வசீகரிக்கும் பனி மூட்டத்தை அனுபவிக்க குளிர் காலத்தை எதிர்நோக்கி காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ராஸ் அல் கைமாவில் உள்ள பிரபலமான மலை மிகவும் கவர்ச்சிகரமான குளிர்கால இடம் என்று ஐக்கிய அரபு அமீரகத்தில் மிகவும் ஆர்வமுள்ள புயல் துரத்துபவர்களில் ஒருவராக அறியப்படும் ஃபஹத் முகமது அப்துல் ரஹ்மான் என்பவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டில் பல சுற்றுலாத் தலங்கள் இருந்தாலும், ஜெபல் ஜெய்ஸ் குளிரை அனுபவிக்க சிறந்த இடம் என்று தெரிவித்த அவர், அத்தகைய இடங்களை அடையும்போது மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும், நேர்மறையாகவும் உணர்வதாகத் தெரிவித்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!