அமீரக செய்திகள்

இந்திய விமானங்களுக்கு புதிய உத்தரவு.. லக்கேஜ்களை இனி 30 நிமிடங்களில் டெலிவரி செய்ய வேண்டும்.. காலக்கெடுவும் விதித்த BCAS..!!

இந்தியாவைச் சேரந்த விமான நிறுவனங்கள் தங்கள் பயணிகளின் லக்கேஜ்களை உரிய நேரத்தில் டெலிவரி செய்யாமல் தொடர்ந்து தாமதித்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இதனால் பயணிகளும் விமான நிலையம் வந்திறங்கியும் விமான நிலையத்தை விட்டு வெளியேற குறைந்தது இரண்டு முதல் மூன்று மணிநேரத்திற்கு மேல் ஆகிவிடுகிறது. இதனால் பயணிகளுக்கு ஏற்படும் சிக்கல்களை கலைய இந்தியாவின் BCAS தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது, இந்திய விமான நிறுவனங்களான ஏர் இந்தியா, இண்டிகோ, ஆகாசா, ஸ்பைஸ்ஜெட், விஸ்தாரா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் கனெக்ட் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய ஏழு முக்கிய விமான நிறுவனங்களை தங்கள் பேக்கேஜ் டெலிவரி நேரத்தை குறைக்குமாறு தி பீரோ ஆஃப் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி (The Bureau of Civil Aviation Security –BCAS) அறிவுறுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள ஆறு முக்கிய விமான நிலையங்களில் ஒரு விரிவான ஆய்வை நடத்திய BCAS, ஏழு விமான நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ததுடன் 3,600 க்கும் மேற்பட்ட விமான இயக்கங்களையும் அவற்றின் பேக்கேஜ் டெலிவரி செய்யும் செயல்முறைகளையும் கடந்த நாட்களில் ஆய்வு செய்துள்ளது.

அதில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் விமான நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள நெறிமுறைகளின்படி, விமானம் வந்திறங்கியதிலிருந்து 30 நிமிடங்களுக்குள் லக்கேஜ்கள் அனைத்தும் பயணிகளுக்கு டெலிவரி செய்யப்பட்டிருக்க வேண்டும் என BCAS இந்திய விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

அதாவது OMDA (Operation, Management and Delivery Agreement) நிபந்தனையின் படி, விமான நிலையம் வந்திறங்கிய விமானத்தின் என்ஜின் நிறுத்தப்பட்ட 10 நிமிடங்களுக்குள் லக்கேஜ்கள் கன்வேயர் பெல்ட்டை அடைவதை விமான நிறுவனம் உறுதி செய்ய வேண்டும். மேலும் லக்கேஜ்கள் அனைத்தும் 30 நிமிடங்களுக்குள் டெலிவரி செய்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.

மேலும் OMDAயின் தரநிலைத் தேவைகளில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள படி, லக்கேஜ்களை சரியான நேரத்தில் டெலிவரி செய்வது மற்றும் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய பின் தாமதமான பேக்கேஜ் டெலிவரியால் பயணிகள் பாதிக்கப்பட்டதாக சமூக ஊடகங்கள் மற்றும் பிற சேனல்கள் வழியாக புகாரளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த ஆய்வின் தொடக்கத்தில் டெலிவரி செயல்திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டாலும், எந்த ஒரு விமான நிறுவனமும் பரிந்துரைக்கப்பட்ட தரநிலைகளை தொடர்ந்து பூர்த்தி செய்யவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, BCAS இந்தியாவின் விமான நிறுவனங்களுக்கு தேவையான நடவடிக்கைகளை செயல்படுத்த 10 நாட்கள் காலக்கெடுவையும் தற்போது நிர்ணயித்துள்ளது.

அதன்படி, வரும் பிப்ரவரி 26ம் தேதிக்குள் இந்திய விமான நிறுவனங்கள் இதனை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும், இந்த உத்தரவுகளுக்கு இணங்கத் தவறினால் அந்த விமான நிறுவனங்கள் மீது ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிவில் விமான  போக்குவரத்து அமைச்சகத்தின் (MoCA) உயரதிகாரி ஒருவரும் தெரிவித்துள்ளார்.

BCAS இன் நடவடிக்கையானது, விமானத் துறையில் பயணிகளின் அனுபவம் மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதுடன், சரியான நேரத்தில் பேக்கேஜ் டெலிவரிக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், விமான நிறுவனங்கள் வாடிக்கையாளர் திருப்தியை மேம்படுத்தலாம் மற்றும் சேவையின் சிறந்த தரத்தை நிலைநிறுத்தலாம் என்பதை சுட்டிக் காட்டுவதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!