அமீரக செய்திகள்

எதிஹாட் ரயிலில் பயணிக்க நோல் கார்டு இருந்தாலே போதும்.. எதிஹாட் ரயில், RTA இடையே போடப்பட்ட புதிய ஒப்பந்தம்..!!

அபுதாபியை தலைமையிடமாக்க் கொண்ட எதிஹாட் ரயில் நிறுவனத்தின் புதிய பயணிகள் ரயில் சேவை ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் தொடங்கப்பட்டவுடன், பயணிகள் தங்களின் நோல் கார்டுகளைப் பயன்படுத்தி எதிஹாட் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக அரசாங்கங்கள் பங்கேற்ற உச்சிமாநாட்டின் போது, துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) மற்றும் அமீரகத்தின் தேசிய ரயில்வே நெட்வொர்க்கின் டெவலப்பர் மற்றும் ஆபரேட்டரான எதிஹாட் ரெயில் (Etihad Rail) ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானதைத் தொடர்ந்து இந்த தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த கூட்டாண்மையின் மூலம், RTA அதன் Nol கார்டு அமைப்பு மூலம் எதிஹாட் ரயில் சேவைக்கான டிக்கெட் முன்பதிவு மற்றும் கட்டணம் செலுத்தும் புதிய வசதியை உருவாக்கும் எனவும் RTA தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோல் கார்டு என்பது துபாயில் உள்ள RTA இன் பொதுப் போக்குவரத்து நெட்வொர்க்குகள் முழுவதும் போக்குவரத்து கட்டணத்தை செலுத்த பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் கார்டு ஆகும். கூடுதலாக, RTA பார்க்கிங் மண்டலங்களில் பார்க்கிங் கட்டணத்தை செலுத்துவதற்கும் Nol கார்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.

அத்துடன், போக்குவரத்து வசதிகளுக்கு மட்டுமின்றி எதிஹாட் மற்றும் ஷிண்டகா அருங்காட்சியகங்கள் மற்றும் துபாய் லேடீஸ் கிளப் போன்ற பல்வேறு பொது இடங்களுக்கு நுழைவுக் கட்டணத்தைச் செலுத்தவும், தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனைக் கடைகளில் பொருட்களை வாங்கவும் Nol கார்டுகளைப் பயன்படுத்தலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!