ADVERTISEMENT

பிக் டிக்கெட்டில் இந்தியருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!! 15 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசை வென்று அசத்தல்..!!

Published: 4 Feb 2024, 12:39 PM |
Updated: 4 Feb 2024, 12:41 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் அய்ன் நகரில் வசிக்கும் ராஜீவ் அரிக்காட் என்ற இந்திய வெளிநாட்டவர், அபுதாபி பிக் டிக்கெட்டின் ரேஃபிள் டிராவின் 260வது தொடரில் 15 மில்லியன் திர்ஹம்ஸ் கிராண்ட் பரிசை வென்று அசத்தியுள்ளார்.

ADVERTISEMENT

தனது வெற்றி குறித்து மனம் திறந்த ராஜீவ், “என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. நான்கிராண்ட் பரிசை வெல்வேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. இது உண்மையில் ஒரு கனவு போல இருக்கிறது” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் தனது முதல் டிக்கெட்டை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியதாகக் கூறிய அவர், வெற்றி பெற்ற டிக்கெட்டை தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் 20 பேருடன் சேர்ந்து வாங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டிடக்கலை வரைவாளராக (architectural draftsman) பணிபுரிந்து வரும் ராஜீவ், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT