ADVERTISEMENT

அபுதாபியின் முதல் இந்து கோவிலை இன்று திறந்து வைத்தார் இந்திய பிரதமர் மோடி..!!

Published: 14 Feb 2024, 8:10 PM |
Updated: 14 Feb 2024, 8:10 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று (செவ்வாய்க்கிழமை) வருகை புரிந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால், இன்று (புதன்கிழமை, பிப்ரவரி 14) அபுதாபியில் உள்ள மத்திய கிழக்கின் முதல் இந்து கற்கோவிலை திறந்து வைக்கப்பட்டது.

ADVERTISEMENT

BAPS சுவாமிநாராயண் சன்ஸ்தாவின் தற்போதைய ஆன்மீக குருவான புனித மஹந்த் சுவாமி மகராஜ் வேத விழாவிற்கு தலைமை வகித்த நிலையில், பிரதமர் மோடி BAPS இந்து கோவிலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்துள்ளார்.

ADVERTISEMENT

அபுதாபியின் அல் முராக்கா பகுதியில் 27 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள கோவிலுக்கு வந்த மோடிக்கு, BAPS இந்து மந்திர் திட்டத் தலைவர் பூஜ்ய பிரம்மவிஹாரிதாஸ் சுவாமி மற்றும் பூஜ்ய ஈஸ்வர்சரண் சுவாமி ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

மேலும், கோயிலின் தரிசனம் மற்றும் பயணத்தைப் பற்றிய 12 நிமிட அதிவேக அனுபவத்தை வழங்கும் 3D மையத்தை மோடி பார்வையிட்டதாகக் கூறப்படுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பிரமுகர்கள் இந்த மாபெரும் விழாவில் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

இளஞ்சிவப்பு நிறத்தில் தோற்றமளிக்கும் இந்த கோவில், ராஜஸ்தானின் இளஞ்சிவப்பு மணல் கல், இத்தாலி வெள்ளை மார்பில் கற்களால் கட்டப்பட்டுள்ளது. இந்த நிகழ்வைக் காண பலர் கோவிலுக்கு வருகை புரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel