அமீரக செய்திகள்

அமீரகத்தில் இன்று பெய்த கனமழை!! தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக NCM தகவல்….

அமீரகம் முழுவதும் இன்றைய தினம் வானிலை மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், பரவலான பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. அத்துடன் நாட்டில் வெப்பநிலை குறைந்தும் காணப்பட்டுள்ளது. குறிப்பாக, தலைநகர் அபுதாபியின் சில பகுதிகளில் கனமழை பதிவாகியுள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது.

NCM வெளியிட்ட அறிவிப்பின்படி, அல் அய்ன், அல் தஃப்ரா, கலீஃபா சிட்டி, அல் ஆர்யம் ஐலேண்ட் மற்றும் அல் வத்பா ஆகிய இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்தது தெரிய வந்துள்ளது.

மேலும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பச்சலன மேகங்கள் உருவாகியிருப்பதால், மழைப்பொழிவை அதிகரிக்க வழக்கமான கிளவுட் சீடிங் பணிகளையும் NCM மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அதிக மழைபொழிவு ஏற்படும் எனவும், வெப்பநிலையில் மேலும் சரிவு ஏற்பட்டாலும், நாளை வானிலை தெளிவாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வப்போது, மிதமான காற்று வீசும் மற்றும் சில சமயங்களில் வலுவாக இருக்கும், குறிப்பாக கடலுக்கு மேல், சில நேரங்களில் கடலோரப் பகுதிகளில் தூசிப் புயல்களை ஏற்படுத்தகூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், அரேபிய வளைகுடாவில் கடல் சீற்றமாகவும் மிகவும் கொந்தளிப்புடனும் இருக்கும் என NCM எச்சரிக்கை விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!