அமீரக செய்திகள்

அமீரகத்தில் பயன்பாட்டிற்கு வந்த இந்தியாவின் RuPay கார்டு.. இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தம்..!!

இந்தியாவின் அதிகாரப்பூர்வ வங்கிப் பரிவர்த்தனை முறையான Rupay தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திலும் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய கிழக்கு நாடுகளில் Rupay வங்கிப் பரிவர்த்தனை முறையை அனுமதிக்கும் முதல் நாடாக அமீரகம் பெயர் பெற்றுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்த போது, இரு நாட்டு தலைவர்களின் முன்னிலையில் இந்தியாவின் இந்த Rupay வங்கிப் பரிவர்த்தனை, அபுதாபியில் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது குறப்பிடத்தக்கது.

ஆகவே, இனி அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்களும், இந்தியாவுக்கு வரும் எமிராட்டிகளும் UPI மற்றும் RuPay கார்டைப் பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை செய்ய முடியும். அதேபோல், இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கும், அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கும் பணம் அனுப்ப முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக X தளத்தில் வெளியான வீடியோவில், அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முஹம்மது பின் சையத் அல் நஹ்யான் அவர்கள் தனது பெயர் பொறித்த RuPay அட்டையை பயன்படுத்தி வங்கிப் பரிவர்த்தனை செய்யும் காட்சிகள் பகிரப்பட்டுள்ளது.

அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையே பல இருதரப்பு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளது. அதில், இரு நாடுகளுக்கும் இடையே தடையற்ற எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளை எளிதாக்குவதற்கு இந்தியாவின் UPI மற்றும் அமீரகத்தின் ‘Aani’ கட்டண முறைகளை ஒன்றோடொன்று இணைப்பதும் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!