ADVERTISEMENT

ஷார்ஜாவில் நடைபாதையில் மோதிய பள்ளி பேருந்து: 3 மாணவர்கள் உட்பட 5 பேருக்கு காயம்…

Published: 8 Feb 2024, 6:53 PM |
Updated: 8 Feb 2024, 6:53 PM |
Posted By: Menaka

ஷார்ஜாவில் இன்று (வியாழக்கிழமை) காலை பள்ளி பேருந்து நடைபாதையில் மோதியதில் 3 மாணவர்கள் உட்பட 5 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், காயமடைந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இது தொடர்பாக ஷார்ஜா காவல்துறை வெளியிட்ட தகவல்களின் படி, சாலையில் சென்று கொண்டிருந்த பள்ளி பேருந்து திடீரென திரும்பி நடைபாதையில் மோதியதால் விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விபத்துக்குப் பின்னர், பள்ளி குழந்தைகள் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதாக அதிகாரிகள் பெற்றோரிடம் உறுதியளித்துள்ளனர்.

ADVERTISEMENT

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பள்ளி பேருந்துகளை கவனமாக ஓட்டுவதன் முக்கியத்துவத்தையும், போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தையும் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT