அமீரக செய்திகள்

குழந்தைகள் முன்னிலையில் புகைப்பிடிப்பது குற்றமா..?? அபராதம் விதிக்கப்படுமா..?? அமீரகத்தின் சட்டம் என்ன கூறுகிறது..??

புகைபிடித்தல் என்பது மக்களிடையே பொதுவான நடைமுறையாக உள்ளது. மேலும் புகைபிடிப்பவர்கள் புகைபிடிப்பதற்கும், புகையிலை தொடர்பான பொருட்களை வாங்குவதற்கும் அவற்றைப் பயன்படுத்துவதற்கும் இ-சிகரெட்டுகள் மற்றும் வேப்கள் (vapes) போன்ற மாற்று வழிகளைக் கடைபிடித்து வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல், வல்லுநர்கள் புகைபிடிப்பவர்களைச் சுற்றி இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புகைப்பிடிக்காத அனைத்து தரப்பினருக்கும் புகைபிடிப்பவர்களுக்கு ஏற்படும் அதே பின்விளைவுகள் ஏற்படுவதாகக் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, புகையிலையால் ஒவ்வொரு ஆண்டும் 8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உயிரிழப்பதாகவும், இதில் 1.3 மில்லியன் புகைப்பிடிக்காதவர்கள் இரண்டாவது கை புகைக்கு ஆளாகிறார்கள் என்றும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளன.

இத்தகைய அபாயங்களைத் தடுக்க அமீரகத்தின் சட்டம் குழந்தைகளைச் சுற்றி புகைபிடிப்பதை எதிர்த்துப் போராடுவதற்கும், சிறார்களுக்கு புகையிலை தொடர்பான பொருட்களை வழங்குவதற்கும் எதிராக கடுமையான நடவடிக்கைகளை அமைத்துள்ளது.

அமீரகத்தின் சட்டம் என்ன கூறுகிறது?

அமீரகத்தில் குழந்தைகளின் உரிமைகளை நிலைநிறுத்தும் வதீமா சட்டத்தின்படி (Wadeema Law), குழந்தைகள் முன்னிலையில் புகைபிடிப்பது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் பிரிவு 21 இன் படி, 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் முன்னிலையில் எந்தவொரு பொது மற்றும் தனியார் போக்குவரத்து பகுதிகளிலும் புகைபிடிப்பது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அதேபோல், மூடப்பட்ட பகுதி அல்லது அறையில் குழந்தைகள் முன்னிலையில் புகைபிடிப்பதற்கும் இது பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. மீறுபவர்களுக்கு 5,000 திர்ஹம்ஸுக்கு குறையாத அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

புகையிலை தொடர்பான பிற அபராதங்கள்

நாட்டில் குழந்தைகளுக்கு புகையிலை பொருட்களை விற்கும் அல்லது விற்க முயற்சிக்கும் நபர்களுக்கு 3 மாதங்களுக்கு குறையாத சிறை தண்டனை மற்றும்/அல்லது 15,000 திர்ஹம்களுக்கு குறையாத அபராதம் விதிக்கப்படும்.

ஆகவே, விற்பனையாளர் வாங்குபவரிடம் அவர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதற்கான சான்றுகளை வழங்குமாறு கேட்க வேண்டும். இந்த அபராதம் குழந்தைகளுக்கு மதுபானங்களை விற்கும் அல்லது விற்க முயற்சிக்கும் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய பிற பொருட்களை விற்பவர்களுக்கும் பொருந்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!