அமீரக செய்திகள்

துபாய்: ‘UAE cycle Tour’ க்காக முக்கிய சாலைகளில் போக்குவரத்து நிறுத்தம்.. RTA தகவல்..!!

துபாயில் இன்று (வியாழக்கிழமை) ‘UAE Tour’ சைக்கிளிங் பந்தயத்தின் நான்காவது கட்டம் நடைபெற உள்ளதால் நகரின் சில சாலைகளில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) நேற்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக RTA வெளியிட்டுள்ள அறிவிப்பில், சைக்கிள் ஓட்டுபவர்கள் கடந்து செல்லும் குறிப்பிட்ட சந்திப்புகளில் மதியம் 12.30 மணி முதல் மாலை 4 மணி வரை 10 முதல் 15 நிமிடங்கள் வரை போக்குவரத்து இடைநிறுத்தப்படும் என்றும், கடைசி போட்டியாளர் கடந்து சென்றதும், வழக்கமான போக்குவரத்து ஓட்டம் மீண்டும் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த போக்குவரத்து தடை துபாய் காவல்துறையின் ஒருங்கிணைப்புடன் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்த ஆணையம், வாகன ஓட்டிகள், பாதை வரைபடத்தை சரிபார்த்து பயணத்தைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தியுள்ளது.

அதேபோல், துபாய் காவல்துறையும் பாதை வரைபடத்தை வெளியிட்டு சாலை மூடல்கள் பற்றி தெரிந்து கொள்ளுமாறு வாகன ஓட்டிகளை அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் செல்லும் வழியில் எந்தவித அசௌகரியமும் ஏற்படாத வகையில், ஓட்டுநர்கள் தமது பயணத்தை முன்கூட்டியே ஆரம்பிக்குமாறு அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த வாரம், UAE Tour பெண்கள் சைக்கிளிங் நிகழ்வு வெற்றிகரமாக நடந்து முடிந்ததைத் தொடர்ந்து, ஆண்களுக்கான சைக்கிளிங் சுற்றுப்பயணம் பிப்ரவரி 19 அன்று தொடங்கி 25 வரை நடைபெற உள்ளது. இது மத்திய கிழக்கில் உள்ள ஒரே UCI வேர்ல்ட் டூர் பந்தயமாகும்.

ஏழு நிலைகளில் 980 கிமீ தூரம் கொண்ட இந்த பந்தயத்தில் நான்கு ஸ்பிரிண்ட் நிலைகள், இரண்டு மலை நிலைகள் மற்றும் 12.1 கிமீ நீளம், அதிவேக தனிநபர் நேர சோதனை ஆகியவை இடம்பெற்றுள்ளன. ‘துபாய் ஸ்டேஜ்’ என்ற தலைப்பில் நடைபெறும் நான்காவது கட்ட பந்தயத்தில் ரைடர்ஸ் 171 கிமீ தூரம் பயணிப்பதைக் காணலாம், இது துபாய் போலீஸ் அதிகாரி கிளப்பில் தொடங்கி துபாய் துறைமுகத்தில் முடிவடையும்.

போட்டியாளர்கள் தேராவை நோக்கி செல்வதற்கு முன் டவுன்டவுன் துபாய் மற்றும் புர்ஜ் கலீஃபா வழியாக செல்வார்கள். பின்னர் அவர்கள் பாலைவனம் மற்றும் அல் குத்ரா சைக்கிள் ட்ராக் மற்றும் ஜுமேரா தீவுகளில் செல்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பாம் ஜுமைராவைக் கடந்த பிறகு, துபாய் துறைமுகத்தில் ஸ்பிரிண்ட் ஃபினிஷ் செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!