ADVERTISEMENT

அமீரகம் முழுவதும் நேற்று பெய்த மழை!! குறிப்பிட்ட பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்த NCM….

Published: 1 Feb 2024, 12:02 PM |
Updated: 1 Feb 2024, 12:02 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபி, துபாய், ஃபுஜைரா, ராஸ் அல் கைமா மற்றும் ஷார்ஜா போன்ற எமிரேட்டுகளில் நேற்றிரவு (புதன்கிழமை) பரவலாக மழை பெய்துள்ளது. இதனைத் தொடர்ந்து அமீரகத்தின் தேசிய வானிலை மையம் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், இன்றைய தினம் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் சில நேரங்களில் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது.

அதேசமயம், 15 – 30 வரையிலும் சில சமயங்களில் மணிக்கு 40 கிமீ வேகத்திலும் மிதமான தென்கிழக்கு முதல் வடகிழக்கு காற்று வீசும் என்றும், நாடு முழுவதும் தூசி வீசும் என்றும் மையம் கணித்துள்ளது.

ADVERTISEMENT

இதனிடையே, கடலோரப் பகுதிகளில் உருவாகும் வெப்பச்சலன மேகங்கள், 55 கிமீ வேகத்தில் வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் குறித்து NCM குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

NCM வெளியிட்ட வானிலை அறிக்கையின் படி, நாட்டில் வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அபுதாபியில் 31ºC ஆகவும், துபாயில் 25ºC ஆகவும் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் என்றும், அபுதாபியில் 20ºC, துபாயில் 22ºC மற்றும் உள் பகுதிகளில் 10ºC வரை வெப்பநிலை குறையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அத்துடன் ஈரப்பதத்தின் நிலைகள் அபுதாபியில் 35 முதல் 70 சதவீதம் வரையிலும், துபாயில் 55 முதல் 85 சதவீதம் வரையிலும் இருக்கும் என்றும் NCM கூறியுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel