அமீரக செய்திகள்

UAE: புனித ரமலான் மாதத்தில் இப்தார் உணவை நன்கொடையாக வழங்க விருப்பமா.? உங்களுக்கான சிறந்த வழிகள் இதோ..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் புனித ரமலான் மாதம் எதிர்வரும் மார்ச் 12ம் தேதி செவ்வாய்கிழமை தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த புனித மாதத்தில் இஸ்லாமியர்கள் விடியற்காலை முதல் சாயங்காலம் வரை நோன்பிருந்து தொழுகை உள்ளிட்ட இறை வணக்கங்களில் ஈடுபடுவர்.

அதே போன்று ஒவ்வொரு ஆண்டும் ரமலான் பண்டிகையின் போது, பிறருக்கு தானம் செய்வது அல்லது தொண்டு செய்வது என பல முயற்சிகளும் நடைபெறும், அதில் அமீரகத்தைப் பொருத்தவரை தன்னார்வத் தொண்டு இந்த செயலின் ஒரு பெரிய பகுதியாக மாறியுள்ளது.

அமீரகவாசிகள் ஏராளமானோர் ரமலான் பண்டிகையில் இத்தகைய தன்னார்வத் தொண்டு செய்வதற்கு, இப்தார் டென்ட்களை அமைக்கவோ அல்லது இப்தார் உணவை விநியோகிக்கவோ விரும்பினாலும், சில அபராதங்களைத் தவிர்ப்பதற்கு அரசாங்கத்தின் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

பொதுவாக, சதகா (Sadaqah) அல்லது தொண்டு கொடுப்பது என்பது, பண நன்கொடைகள், உணவு வழங்குதல், தேவைப்படுபவர்களுக்கு உதவுதல் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு பங்களிப்பு செய்தல் உள்ளிட்ட பல்வேறு வடிவங்கள் மூலம் செய்யப்படலாம்.

குறிப்பாக, உணவு வழங்க விரும்பும் குடியிருப்பாளர்கள் இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் அறநிலையத் துறையில் (Islamic Affairs & Charitable Department -Iacad) பதிவுசெய்யப்பட்ட அதிகாரப்பூர்வ சேனல்கள் மூலம் இஃப்தார் உணவை வழங்கலாம்.

ரமலான் மாதத்தில் இப்தார் உணவுகளை வழங்கக்கூடிய இணையதளங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

துபாய் தொண்டு சங்கம் –சாப்பாட்டுக்கு 15 திர்ஹம்

துபாய் அறக்கட்டளையின் ரமலான் திட்டம், உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் மசூதிகள் மற்றும் குடியிருப்பு வளாகங்களில் இப்தார் ஏற்பாடு செய்வதன் மூலம் தேவைப்படுபவர்களுக்கு உணவு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழ்காணும் லிங்கில் சென்று தங்களின் பங்களிப்பை செலுத்தலாம். http://(https://dubaicharity.org/ar/project-detail/1202)

மேலும் இந்த நன்கொடைகளை அமீரக குடயருப்பாளர்கள் துபாய் இஸ்லாமிக் பேங்க் அல்லது அபுதாபி இஸ்லாமிக் பேங்க் மூலமாகவும் வழங்கலாம்.

  • துபாய் இஸ்லாமிக் பேங்க் (DIB) – கணக்கு எண்: 001-520-5515955-01
  • IBAN எண்: AE270240001520551595501
  • அபுதாபி இஸ்லாமிக் பேங்க் (ADIB) – கணக்கு எண்: 10022955
  • IBAN எண்: AE070500000000010022955

பீட் அல் கைர் சொசைட்டி-சாப்பாட்டுக்கு 15 திர்ஹம்

‘Feeding the Fasting’ என்கிற ரமலான் திட்டம் துபாய் மற்றும் வடக்கு எமிரேட்ஸ் ஆகிய இரு எமிரேட்களிலும் நோன்பு கடைபிடிக்கும் தொழிலாளர்கள் மற்றும் பிற தகுதியான நோன்பாளிகளுக்கு அவர்களின் தங்குமிடங்களில் அல்லது அவர்கள் எங்கிருந்தாலும் இப்தார் உணவுகளை வழங்குவதை உறுதி செய்கிறது.

கொடை வழங்க விரும்பும் நபர்கள் தாங்கள் பணம் செலுத்த விரும்பும் உணவின் எண்ணிக்கையை உள்ளிட்டு அவர்களின் பெயர், மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை கீழ்கண்ட இந்த லிங்கில் வழங்க வேண்டும். http://(https://beitalkhair.org/en/epay/fasting-project/)

இது தவிர, வங்கி பரிவர்த்தனைகள், SMS நன்கொடைகள், தொண்டு கியோஸ்க்குகள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட சேகரிப்பாளர்கள் மூலமாகவும் கொடையளிக்கலாம்.

டார் அல் பெர் சொசைட்டி 

ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் தொண்டு நிறுவனங்களில் ஒன்றாக கருதப்படும் டார் அல் பெர் சமூகமும் இப்தார் உணவுக்காக நன்கொடைகளை சேகரித்து வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெளியே உணவுக்கு10 திர்ஹம்ஸ் மற்றும் அமீரகத்திற்குள் உணவுக்கு 15 திர்ஹம்ஸ் வழங்கலாம்.

தாராஹும் தொண்டு அறக்கட்டளை

தாராஹூம் அறக்கட்டளை என்பது துபாயில் உள்ள இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தொண்டு நடவடிக்கைகள் துறையால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறக்கட்டளை ஆகும். இது மனிதாபிமான முயற்சியை மேற்கொள்கிறது மற்றும் தேவைப்படும் மக்களுக்கு சேவை செய்கிறது. இந்த அறக்கட்டளை பல உதவித் திட்டங்களைக் கொண்டுள்ளது. அவை ரமலான் பண்டிகையின் போது மூன்று பருவகால உதவிகளாக வழங்கப்படுகின்றன.

ரெட் கிரசண்ட் சொசைட்டி

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (International Federation of Red Cross) மற்றும் செஞ்சிலுவைச் சங்கங்களின் இணை நிறுவனமான UAE Red Crescent Society, குடியிருப்பாளர்கள் நன்கொடை அளிப்பதற்காக பல ரமலான் நன்கொடை திட்டங்களை வழங்குகிறது. எனவே இப்தார் உணவிற்கு நனகொடை வழங்க விரும்புபவர்கள் இதன் மூலமும் தங்கள் பங்களிப்பை வழங்க முடியும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!