அமீரக செய்திகள்

துபாயில் வெள்ளத்தில் மூழ்கிய காரிலிருந்து குடும்பத்தை பத்திரமாக மீட்ட மீட்புக்குழு..!!

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் சென்ற வார இறுதியில் இடைவிடாது பெய்த பலத்த மழையால், குடியிருப்பாளர்களும் வாகன ஓட்டிகளும் கடும் அவதிப்பட்டனர். நாட்டில் முன்னறிவிக்கப்பட்ட இந்த பாதகமான வானிலையை கருத்தில்கொண்டு, துபாய் உட்பட பல்வேறு எமிரேட்களிலும் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கனமழையின் தாக்கத்தை சமாளித்தனர்.

குறிப்பாக, துபாயில் சீரற்ற வானிலையை எதிர்கொள்ள, துபாய் முனிசிபாலிட்டி, சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), துபாய் போலீஸ், முகமது பின் ரஷீத் ஹவுசிங் எஸ்டாப்லிஷ்மென்ட் மற்றும் நக்கீல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் இருந்து மொத்தம் 2,300 பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இத்தகைய சூழலில், திங்களன்று துபாய் காவல்துறையின் அவசரகாலப் பதிலளிப்புக் குழுவானது (Emergency Response Team), துபாய்-அல் அய்ன் சாலையில் உள்ள பாலத்தின் கீழ் தண்ணீரில் மூழ்கியிருந்த வாகனத்தில் சிக்கியிருந்த ஒரு குடும்பத்தை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

இது தொடர்பான வீடியோவை துபாய் காவல்துறை X தளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், மீட்புக் குழு ஒரு படகுடன் வெள்ளத்தில் மூழ்கிய காரை நோக்கி செல்வதையும், அதில் சிக்கியிருந்த குடும்பத்தை பாதுகாப்பாக வெளியே மீட்பதையும் அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.

இதுபோல, ஐக்கிய அரபு அமீரத்தின் பல பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், குடியிருப்பாளர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும், தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளிலிருந்து விலகி இருக்குமாறும் அதிகாரிகளால் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் சிறப்பாக செயல்பட்ட போலீஸ் அதிகாரிகள், போக்குவரத்து பாதுகாப்புப் பணியாளர்கள், RTA அதிகாரிகள் மற்றும் வெள்ளத்தில் மூழ்கிய தெருக்களில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவதற்கு உதவிய தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றினை துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!