அமீரக செய்திகள்

துபாயின் முக்கிய சாலையில் புதிய ஜங்க்‌ஷனை திறந்த RTA!! பயண நேரம் 30 வினாடிகளாகக் குறைக்கப்படும் என அறிவிப்பு…

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), உம் சுகீம் ஸ்ட்ரீட் மற்றும் அல் தான்யா ஸ்ட்ரீட் இடையே அமைந்துள்ள அல் மஜாசிமி மற்றும் அல் வாஸ்ல் சாலையில் ஒரு புதிய ஜங்க்‌ஷனை திறந்துள்ளதாக நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது.

இதன் மூலம், அல் வாஸ்ல் சாலை மற்றும் உம் சுகீம் ஸ்ட்ரீட்டின் பரபரப்பான பகுதிகளைச் சுற்றிச் செல்லும் போக்குவரத்து எளிதாகும் என்று கூறப்படுகிறது. எப்போதும் பரபரப்பாக இருக்கும் சாலையில் வாகனங்களின் இயக்கத்தை எளிதாக்குவதற்கு சிக்னல்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆகவே இப்போது, அல் மஜாசிமி ஸ்ட்ரீட்டில் இருந்து அல் வாஸ்ல் சாலையில் இடதுபுறத் திருப்பங்கள் எளிதாக்கப்பட்டுள்ளன என்றும், அத்துடன் அல் வாஸல் சாலையில் U-turn எடுத்த பின்னர் உம் சுகீம் ஸ்ட்ரீட்டில் வலதுபுறம் திரும்ப வேண்டிய தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்த சாலை மேம்பாட்டுத் திட்டம், பல கடைகள் மற்றும் பள்ளிகள் அமைந்துள்ள இரண்டு பகுதிகளான உம் சுகீம் ஸ்ட்ரீட்டுடன் அல் வாஸ்ல் சாலையின் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், இது உம் சுகீம் 3 இல் இருந்து வடக்கு நோக்கி அல் வாஸ்ல் சாலைக்கான பயண நேரத்தை மூன்று நிமிடங்களிலிருந்து 30 வினாடிகளாகக் குறைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன் அல் மஜாசிமி ஸ்ட்ரீட் ஒவ்வொரு திசையிலும் ஒன்றிலிருந்து இரண்டு பாதையாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது, இதனால் ஒரு மணி நேரத்திற்கு 1,200 முதல் 2,400 வாகனங்கள் என ஒவ்வொரு பாதையின் திறனும் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளை முடிப்பது RTAவின் விரைவான போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டம் 2024ன் (Quick Traffic Improvements Plan 2024) ஒரு பகுதியாகும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த புதிய சாலை மேம்பாட்டின் மூலம் அப்பகுதியை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு இனி பயண நேரம் மிச்சமாகும் என்பதில் சந்தேகமில்லை.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

 

Related Articles

Back to top button
error: Content is protected !!