அமீரக செய்திகள்

துபாய் டிரைவிங் லைசன்ஸ் டெஸ்டில் ஃபெயில் ஆவது பற்றி கவலையா.? முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் என்பது தெரியுமா.?

துபாயில் டிரைவிங் லைசன்ஸ் பெறுவது என்பது பலருக்கும் சவாலான காரியமாக இருக்கும். குறிப்பாக, அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றுவிட்டு இறுதியாக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) ஓட்டுநர் தேர்வில் (Road Test) பலமுறை தோல்வியடைவது என்பது மன உளைச்சலையும் மிகுந்த ஏமாற்றத்தையும் பலருக்கும் ஏற்படுத்தலாம்.

ஏனெனில், ஓட்டுநர் தேர்வில் தோல்வியுற்ற பிறகு, மீண்டும் ஓட்டுநர் பள்ளிக்குச் சென்று கூடுதல் வகுப்புகளை முன்பதிவு செய்து மீண்டும் ஓட்டுநர் தேர்விற்காக தயாராக வேண்டும். இதனால் நமக்கு கூடுதல் செலவாகும் என்பது மட்டுமல்லாமல் நேரமும் கணிசமாக வீணாகும்.  இதனாலேயே துபாயில் ஓட்டுநர் உரிமம் பெறுவது என்பது ஒரு மிகப்பெரிய சாதனையாகத் தெரிகிறது.

அவ்வாறு, நீங்கள் RTAவின் இறுதி ஓட்டுநர் தேர்வில் (Road Test) தோல்வியடைந்தால், அதற்கு உங்களின் ஓட்டுநர் தேர்வை கண்கானித்தவர் நியாயமற்ற முறையில் நடந்து கொண்டார் என நீங்கள் எண்ணினால், உங்களின் தேர்வு முடிவை எதிர்த்து ஆன்லைனிலேயே மேல்முறையீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் என்பதை பலரும் தெரிந்திருக்கவில்லை. அதுபற்றிய கூடுதல் விபரங்களை இங்கே காணலாம்.

ஐந்து நிமிடங்களில் மேல்முறையீட்டிற்கு விண்ணப்பிப்பது எப்படி?

  • http://ums.rta.ae க்குச் சென்று உங்கள் எமிரேட்ஸ் ஐடியுடன் உள்நுழையவும்.
  • ‘Services’ என்பதைக் கிளிக் செய்து, ‘driver and car owner services’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • அடுத்தபடியாக, சேவைகளின் பட்டியலிலிருந்து, ‘Apply for Appealing for Road Test Results’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • இப்போது ‘Apply Now’ பொத்தானைக் கிளிக் செய்து இரண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கவும்.
  • பின்னர் கட்டணத்தைச் செலுத்தவும்.
  • அதன் பிறகு, RTA தரப்பில் விசாரணை நடத்தப்படும். இறுதியாக, ஐந்து வேலை நாட்களுக்குள் உங்கள் முடிவுகளை நீங்கள் எதிர்பார்க்கலாம்.

கட்டணம், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்:

RTAவின் படி, மேல்முறையீட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் சேவைக் கட்டணமாக 300 திர்ஹம்ஸ் மற்றும்  ‘Knowledge and Innovation fee’ கட்டணமாக 20 திர்ஹம்ஸ் செலுத்த வேண்டும். விசாரணைக்குப் பிறகு, விண்ணப்பதாரரின் கருத்து சரியானதாகக் கருதப்பட்டால், சோதனை முடிவு மாற்றப்படுவதுடன், இதற்காக செலுத்தப்பட்ட கட்டணம் திருப்பி அளிக்கப்படும்.

எவ்வாறாயினும், இலகுரக வாகன சாலை சோதனையின் (light vehicle road test) முடிவைப் பெற்ற இரண்டு வேலை நாட்களுக்குள் இந்த சேவைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்வதும் அவசியமாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!