அமீரக செய்திகள்

அதீத மழையால் பச்சைப்பசேல் என காட்சியளிக்கும் அமீரகம்..!! கண்களை கவரும் புகைப்படங்களின் தொகுப்பு..!!

கடந்த சில வாரங்களாக அமீரகம் முழுவதும் இடைவிடாமல் மழை பெய்து வந்த நிலையில், நாட்டின் வறட்சியான பாலைவன நிலப்பரப்புகள் அனைத்தும் தற்போது பச்சைப்பசேல் என்று காட்சியளிக்கின்றன. எப்போதும் வறண்டு காணப்படும் நிலப்பரப்புகளில் செடி, கொடிகள் துளிர்த்து செழித்திருப்பதால் புத்துணர்ச்சியூட்டும் காட்சிகளை குடியிருப்பாளர்க்ளால் தற்போது கானமுடிகிறது.

குறிப்பாக, ராஸ் அல் கைமாவில் உள்ள அல் ஹுவைலத் மலைகள் பசுமையான கம்பளத்தால் மூடப்பட்டதைப் போன்று காட்சியளிக்கிறது. அதே நேரத்தில் சாலையில் நிற்கும் காஃப் மரங்களும் பார்ப்போரின் கண்களுக்கு விருந்தளிக்கிறது.

ராஸ் அல் கைமா மட்டுமின்றி மற்ற எமிரேட்களிலும் உயிர்ப்புடன் காட்சியளிக்கும் நிலப்பரப்புகளின் வீடியோக்களை அமீரகத்தின் வானிலை தொடர்பான சமூக ஊடகக் கணக்கான புயில் மையம் (Storm Center) வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோக்களில், ஷார்ஜாவின் மத்தியப் பகுதியான அல் ஃபயா மற்றும் மிலிஹா போன்ற பகுதிகள், இடைவிடாத மழைக்குப் பிறகு துடிப்பான பச்சை நிறச் செடிகளால் சூழப்பட்ட நிலப்பரப்புகளுடன் காட்சியளிப்பதைக் காணலாம்.

அதேசமயம், அல் அய்னில் உள்ள பச்சை-இலைக் காய்கறிகளை உற்பத்தி செய்யும் பண்ணைகள் பருவத்தின் தொடக்கத்துடன் ஒப்பிடுகையில், மழைக்குப் பிறகு அழகான வெள்ளை மற்றும் மஞ்சள் வண்ணப் பூக்களுடன் குளிர்ச்சி நிறைந்ததாக காட்சியளிக்கிறது.

இவ்வாறு நாடு முழுவதும் பாலைவன பரப்புகள் பசுமையாகவும், வண்ணமயமான பூக்கள் பூத்துக்குலுங்கும் சோலையாகவும் காட்சியளிப்பதற்கு கடந்த சில நாட்களாக அமீரகத்தில் பெய்த கனமழையே காரணமாகக் கருதப்படுகிறது.

மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் காற்றழுத்தத் தாழ்வு நிலை இன்னும் ஆழமடைந்து வருவதால், இமரமாதத்தின் இறுதி வரையிலும் அவ்வப்போது பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என்றும் அமீரகத்தின் தேசிய வானிலை மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

புகைப்படத் தொகுப்பு:

படம் 1: ராஸ் அல் கைமா (Image Credit: Ahmed Ramzan / Gulf News)
படம் 2: துபாய் பாலைவனப் பகுதி (Image Credit: Ahmed Ramzan / Gulf News)
படம் 3: ஷார்ஜா பாலைவனப் பகுதி (Image Credit: Ahmed Ramzan / Gulf News)
படம் 4: அஜ்மான் (Image Credit: Ahmed Ramzan / Gulf News)
படம் 5: ஃபுஜைரா (Image Credit: Ahmed Ramzan / Gulf News)
படம் 6: அல் அய்ன், அபுதாபி (Image Credit: Ahmed Ramzan / Gulf News)
படம் 7: டிப்பா, ஃபுஜைரா (Image Credit: Ahmed Ramzan / Gulf News)
படம் 8: கொர்ஃபக்கான் (Image Credit: Ahmed Ramzan / Gulf News)
படம் 9: உம் அல் குவைன் (Image Credit: Ahmed Ramzan / Gulf News)

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!