அமீரக செய்திகள்

துபாயில் நியாயமான வாடகைதான் செலுத்துகிறீர்களா?? வாடகை உயர்வைக் கணக்கிடுவது எப்படி???

துபாயில் அவ்வப்போது குடியிருப்புகளின் வாடகை விகிதம் உயர்வதும் சரிவதும் வழக்கமான ஒன்றுதான். பொதுவாக, எமிரேட்டின் ரியல் எஸ்டேட் சந்தை நிலவரம், சப்ளை மற்றும் சொத்துக்கான தேவை போன்ற காரணிகளைப் பொறுத்து வாடகை அதிகரிப்பும் குறைப்பும் இருக்கும்.

இருப்பினும், நீங்கள் செலுத்த வேண்டிய சரியான வாடகை தொகை எவ்வளவு மற்றும் நியாயமான விலையை விட அதிகமாக நீங்கள் செலுத்தவில்லை என்பதை எவ்வாறு உறுதிப்படுத்துவது போன்ற விபரங்களைத் தெரிந்து வைத்திருப்பது சிறந்தது.

பொதுவாக துபாயில் வாடகைக்கு குடியிருப்பவர்கள் அனைவரும், வாடகைக் குறியீடு புதுப்பிக்கப்படும் போதெல்லாம் வாடகை அதிகரிப்பு குறித்தான அறிவிப்பைப் பெறுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் வாடகையை உயர்த்துவதற்கு உரிமை உண்டு என்றாலும், சொத்து உரிமையாளர்களுக்கு துபாய் வாடகைக் குறியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணங்களுக்கு அப்பால் உயர்த்த முடியாது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

துபாய் நிலத் துறையின் (Dubai Land Department-DLD) ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஏஜென்சியின் (RERA) ஆன்லைன் கருவியான Rera கால்குலேட்டர், ரியல் எஸ்டேட் சந்தையில் நியாயமான வாடகை அதிகரிப்பு மற்றும் சராசரி விலைகளை கணக்கிட உதவுகிறது.

துபாய் வாடகைக் கால்குலேட்டரைப் பயன்படுத்தி எப்படி நியாயமான வாடகையை கணக்கிடுவது என்பதைப் பின்வருமாறு பார்க்கலாம்:

படி 1: உங்கள் இஜாரி (ejari) / குத்தகை ஒப்பந்தத்தை (tenancy contract) சரிபார்க்கவும்

உங்கள் குத்தகை ஒப்பந்தத்தில் இருந்து சில விவரங்களை உள்ளிட வேண்டும், எனவே அதை தயாராக வைத்திருங்கள்.

படி 2: துபாய் நிலத் துறையின் இணையதளத்திற்குச் செல்லவும் http://(https://dubailand.gov.ae/)

இந்த இணையதளத்தில் உள்நுழைந்ததும் ‘Services’ என்பதைக் கிளிக் செய்து, ‘Popular Services’ அல்லது ‘Informative’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், ‘Inquiry about the rental index’ என்பதைத் தேர்ந்தெடுத்தால் கால்குலேட்டருக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.

படி 3: சேவையை அணுகவும்

அடுத்தபடியாக, ‘proceed’  மற்றும் ‘access the service’ என்பதைக் கிளிக் செய்தவுடன், நிரப்புவதற்கான படிவத்தைக் காண்பீர்கள். அதில் உங்கள் வசிப்பிடத்தைப் பற்றிய பின்வரும் விவரங்களை உள்ளிடவும்: ஒப்பந்த முடிவு தேதி, சொத்து வகை, பகுதி, அறைகளின் எண்ணிக்கை மற்றும் தற்போதைய வருடாந்திர வாடகை.

படி 4: முடிவைப் பெறுங்கள்

மேற்கூறிய விபரங்களை உள்ளிட்டதும் ‘calculate’ பொத்தானைக் கிளிக் செய்ததன் பின்னர், உங்கள் பகுதியில் உள்ள ஒரு சொத்தின் சராசரி வாடகை மற்றும் வாடகை உயர்வின் அதிகபட்ச சதவீதத்தை உங்களுக்குத் தெரிவிக்கும். இந்த முடிவை நீங்கள் PDF ஆக டவுன்லோட் செய்யலாம்.

அதிகரிப்பு எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

DLD இணையதளத்தில் கிடைக்கும் தகவலின்படி, கணக்கீடு எவ்வாறு செயல்படுகிறது என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • சந்தை மதிப்பை விட வாடகை 10 சதவீதம் குறைவாக இருந்தால், வாடகை அதிகரிப்பு இல்லை.
  • 11-20 சதவீதம் குறைவாக இருந்தால், அதிகபட்சமாக 5 சதவீதம் வரை அதிகரிக்கலாம்.
  • 21-30 சதவீதம் குறைவாக இருந்தால், அதிகபட்சமாக 10 சதவீதம் வரை அதிகரிக்கலாம்
  • 31-40 சதவீதம் குறைவாக இருந்தால், அதிகபட்சமாக 15 சதவீதம் வரை அதிகரிக்கலாம்.
  • இது 40 சதவீதத்திற்கு குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால், அதிகபட்ச அதிகரிப்பு 20 சதவீதம் வரை இருக்கலாம்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!