அமீரக செய்திகள்

துபாய் முழுவதும் நீங்கள் பார்க்க வேண்டிய ரமலான் மார்க்கெட்.. எங்கெங்கு காணப்படும்..??

புனித ரமலான் மாதம் தொடங்கியதிலிருந்து துபாய் முழுவதும் பரபரப்பான இரவு சந்தைகள், அற்புதமான கலாச்சார நிகழ்ச்சிகள், சுவையான உணவுக் கடைகள் என பண்டிகைக்கோலம் பூண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த ரமலானில் எமிரேட்டில் நீங்கள் பார்க்க வேண்டிய நிகழ்வுகள், சந்தைகள் மற்றும் இடங்களைப் பற்றிய விபரங்களைப் பின்வருமாறு பார்க்கலாம்:

1. பே மார்க்கெட்டில் ரமலான் (Ramadan at Bay market)

இடம் – தி பே சோஷியல், துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி

வியாழன் முதல் ஞாயிறு வரை இரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் இந்த மார்க்கெட்டிற்கு நுழைவு இலவசம். துபாய் ஃபெஸ்டிவல் சிட்டியில் அமைந்துள்ள இந்த திறந்தவெளி மார்க்கெட்டில் சுவையான உணவுக் கடைகள், உற்சாகமான நிகழ்வுகள் மற்றும் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு செயல்பாடுகளை அனுபவிக்கலாம்.

2. ரமலான் வொண்டர் சூக் (Ramadan Wonder Souq)

குளோபல் வில்லேஜ் புனித மாதத்திற்காக, புத்தம் புதிய ‘ரம்ஜான் வொண்டர்ஸ் சூக்கை’ அறிமுகப்படுத்தியுள்ளது. இது குளோபல் வில்லேஜின் மையத்தில் அமைந்துள்ளது. தினசரி மாலை 6 மணி முதல் அதிகாலை 2 மணி வரை இயங்கும் இந்த இடத்திற்கு செல்ல விரும்புபவர்கள் அதன் இணையதளம் – http://www.globalvillage.ae மூலம் ஆன்லைனில் டிக்கெட்டுகளை வாங்கினால், கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடியைப் பெறலாம்.

 

  • எனி டே டிக்கெட்டுகள் (Any day tickets) – 30 திர்ஹம் (ஆன்லைனில் 27 திர்ஹம்)
  • வார நாள் டிக்கெட்டுகள் – 25 திர்ஹம் (ஆன்லைனில் 22.50 திர்ஹம்)

• இடம் – குளோபல் வில்லேஜ் (ஷேக் முகமது பின் சையத் சாலை/E311 வழியாக அணுகலாம், எக்ஸிட் 37)

3. அல் சீஃப்:

ரமலான் மாதம் முழுவதும் (மார்ச் 11 முதல் ஏப்ரல் 14 வரை) ஏராளமான பண்டிகை விளக்குகளால் ஜொலிக்கும் அல் சீஃப் பகுதியில் உள்ள பூங்காவில் நுழைவு இலவசம். மேலும், அங்குள்ள ரமலான் பஜாரில் உலாவலாம் மற்றும் அருகிலுள்ள உணவகங்களில் இஃப்தார் மற்றும் சுகூர் உணவுகளை அனுபவிக்கலாம். பார்வையாளர்கள் இங்கு இரவு 8.30 முதல் நள்ளிரவு 12 மணி வரை அணுகலாம்.

4. எதிஹாத் மியூசியம்:

எதிஹாத் மியூசியம் ரமலானை முன்னிட்டு, துபாய் வானியல் குழுவுடன் இணைந்து எமிரேட்ஸ் லூனார் மிஷனால் ஈர்க்கப்பட்ட இரண்டு இரவு ரமலான் பண்டிகையை நடத்துகிறது. இங்கு பார்வையாளர்களுக்கு நுழைவு இலவசம் என்றாலும், கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். https://www.eventbrite.com/e/ramadan-nights-at-the-etihad-museum-astro-suhoor-festival-tickets-856907121267

  • தேதி மற்றும் நேரங்கள் – வெள்ளிக்கிழமை, மார்ச் 15 முதல் சனிக்கிழமை, மார்ச் 16 இரவு 8 மணி முதல் 12 மணி வரை.
  • இடம் – எதிஹாத் மியூசியம் கார்டன்

5. எக்ஸ்போ சிட்டியில் ‘ஹாய் ரமலான்’:

அமீரகக் குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் எக்ஸ்போ சிட்டி துபாயில் கலாச்சார மற்றும் பாரம்பரிய அனுபவங்கள், குடும்ப நட்பு நடவடிக்கைகள், இஃப்தார்கள் மற்றும் சுஹூர் உணவுகள் மற்றும் கைவினைப்பொருட்களுக்கான சந்தை போன்றவற்றை எதிர்பார்க்கலாம்.

மேலும், இஃப்தார் கனான் ஃபயரிங் (cannon firing), குழந்தைகளுக்கான நாடக நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை உறுதியளிக்கிறது. அதுமட்டுமில்லாமல், இங்குள்ள 20க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள் மற்றும் உணவு வண்டிகளில் இப்தார், சுஹூர் உணவுகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு ஒரு நபருக்கு நுழைவுக் கட்டணமாக 20 திர்ஹம்ஸ் வசூலிக்கப்படுகிறது, சில நடவடிக்கைகள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு கூடுதல் கட்டணங்கள் பொருந்தும். இருப்பினும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நுழைவு இலவசம்.

  • தேதி மற்றும் நேரங்கள் – மார்ச் 9 முதல் ஏப்ரல் 8, 2024 மாலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை.
  • இடம் – அல் வாஸ்ல் பிளாசா, எக்ஸ்போ சிட்டி துபாய்.

6. துபாய் சர்வதேச நிதி மையத்தில் (DIFC) ரமலான் டிஸ்ட்ரிக்ட் (Ramadan District)

ரமலான் மாதம் முழுவதும் சிறந்த எமிராட்டி மற்றும் பிராந்திய கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் திறந்தவெளி மார்க்கெட்டுகளில் ஒன்று ரமலான் டிஸ்ட்ரிக்ட். இந்த மார்க்கெட்டானது, உள்நாட்டு பிராண்டுகள், ஹோம்வேர் பொருட்கள், பாகங்கள் மற்றும் விளையாட்டு மைதானம் மற்றும் ஏராளமான செயல்பாடுகளுடன் கூடிய குழந்தைகளுக்கான பிரத்யேக பகுதி போன்ற பல்வேறு செயல்பாடுகளைக் கொண்டிருக்கும்.

  • தேதி மற்றும் நேரங்கள் – மார்ச் 15 முதல் ஏப்ரல் 4, 2024 மாலை 5 மணி முதல் அதிகாலை 2 மணி வரை.
  • இடம் – பிளாசா டெரஸ், ஜுமேரா எமிரேட்ஸ் டவர்ஸ்

ரமலான் அலங்காரங்கள்:

ரமலான் பண்டிகையை முன்னிட்டு அமீரகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளும் பண்டிகை விளக்குகள் மற்றும் அலங்காரங்களால் ஜொலித்துக் கொண்டிருக்கும். அந்தவகையில், நீங்கள் அல் சீஃப், அல் கவானீஜ் வாக், JBR (ஜுமேரா கடற்கரை குடியிருப்புகள்) மற்றும் பாக்ஸ் பார்க் உள்ளிட்ட இடங்களில் ரமலான் அலங்காரங்களை காணலாம்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!