அமீரக செய்திகள்

வெளிநாட்டவர்கள் சொந்த நாடுகளுக்கு இலவசமாக கால் பேச RTAவின் புதிய முயற்சி..!! இந்த சலுகையை எங்கே அணுகுவது??

துபாய் குடியிருப்பாளர்கள் தங்களின் சொந்த நாடுகளில் உள்ள குடும்பங்கள் மற்றும் உறவினர்களுடன் இலவசமாக பேசுவதற்கான புதிய முயற்சியை துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தொடங்கியுள்ளது. ‘We Bring You Closer’ எனும் பிரச்சாரத்தின் மூலம் RTA தொடங்கியுள்ள இந்த முயற்சியின் மூலம், மெட்ரோ பயனர்கள் உலகெங்கிலும் உள்ள அவர்களின் அன்புக்குரியவர்களை தொடர்பு கொள்ள துபாய் மெட்ரோ ரயில் நிலையங்களில் சிறப்பு ஃபோன் பூத்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் RTA கூறியுள்ளது.

துபாய் மெட்ரோ மற்றும் டிராமின் ஆபரேட்டரான கியோலிஸ் (Keolis) உடன் இணைந்து, அல் குபைபா (Al Ghubaiba), யூனியன் (Union) மற்றும் ஜெபல் அலி (Jebel Ali) மெட்ரோ நிலையங்கள் உட்பட நான்கு நிலையங்களில் இந்த இலவச ஃபோன் பூத்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் RTA தெரிவித்துள்ளது.

இந்த ஃபோன் பூத்கள் புனித ரமலான் மாதத்தில் மெட்ரோ பயனர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் இலவச சர்வதேச அழைப்புகளைச் செய்ய அனுமதிக்கும். RTAவின் இந்த முன்முயற்சி, தங்களது குடும்பங்களைப் பிரிந்து எமிரேட்டில் வசிக்கும் மில்லியன் கணக்கான வெளிநாட்டவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

ரமலான் முயற்சிகள்:

RTA ஆனது, புனித மாதத்தை முன்னிட்டு “Journey of Good” என்ற கருப்பொருளின் கீழ் தொடர்ச்சியாக மனிதாபிமான மற்றும் சமூகம் சார்ந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சிகள், RTA மற்றும் கியோலிஸ், துபாய் மெட்ரோ மற்றும் டிராமின் ஆபரேட்டர் ஆகியவற்றின் தன்னார்வலர்களுடன் இணைந்து, சமூகப் பணியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

குறிப்பாக, இந்த முன்முயற்சிகள் மூலம், RTA ஊழியர்கள், பஸ், டெலிவரி பைக்கர்ஸ் மற்றும் டிரக் டிரைவர்கள், தொழிலாளர்கள் மற்றும் அப்ராவில் பயணிப்பவர்கள் ஆகியோரை உள்ளடக்கிய சமூகத்தை இலக்காகக் கொண்டு, ரமலான் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகள், நிகழ்வுகள் மற்றும் சேவைகள் வழங்கப்படுகிறது.

RTAவின் முன்முயற்சிகள்:

RTA தொடங்கியுள்ள ‘Modes of Good’ என்கிற முன்முயற்சியானது, RTA இன் மீல்ஸ் ஆன் வீல்ஸ் வருடாந்திர முன்முயற்சியின் விரிவாக்கப்பட்ட பதிப்பாகும். அதாவது, புனித மாதத்தில் தினமும் 8,000 உணவுகளை தயாரித்து அவற்றை விநியோகிக்க பல்வேறு பின்னணியில் இருந்து RTA ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களை திரட்டும் தொண்டு முயற்சி இது. இந்த உணவுகள் நியமிக்கப்பட்ட ஒரு சிறப்பு பேருந்து மற்றும் அப்ரா மூலம் டெலிவரி செய்யப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும், இந்த முயற்சி எமிரேட்டில் உள்ள பஸ் டிரைவர்கள், டெலிவரி பைக் ரைடர்கள், டிரக் டிரைவர்கள் மற்றும் அப்ரா ரைடர்கள் ஆகியோரை ஆதரிக்கிறது. கூடுதலாக, இந்த முறை  முன்முயற்சியின் தன்னார்வலர்கள் உணவு வழங்குவதற்காக தொழிலாளர் தங்குமிடங்களுக்குச் சென்றும், சமூகப் பிணைப்பை வலுப்படுத்துகின்றனர்.

ரமலான் கூடாரத் திட்டம்:

இது தவிர, RTA பைத் அல் கைர் சொசைட்டியுடன் (Beit Al Khair Society) இணைந்து, ரமலான் கூடாரத் (ramalan tent) திட்டத்தையும் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், எமிரேட்டில் பிரத்யேகக் கூடாரம் அமைக்கப்பட்டு புனித மாதத்தில் நோன்பு இருப்பவர்களுக்கு 2000 இப்தார் உணவுகள் வழங்கப்படுகிறது.

ஊழியர்களின் முயற்சிகள்:

எல்லாவற்றிற்கும் மேலாக, RTA ஊழியர்களின் பல்வேறு உள் முயற்சிகள் உள்ளன. இதில் ‘How to Prepare for Ramadan’ என்கிற முயற்சி, ஆரோக்கியமான நோன்புப் பழக்கங்களை முன்னிலைப்படுத்தவும், புனித மாதத்தின் தொடக்கத்திற்கு முன் சமச்சீரான உணவைப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதற்காகவும் வடிவமைக்கப்பட்ட மூன்று ரிமோட் ஒர்க் ஷாப்களை உள்ளடக்கியது.

அதுமட்டுமின்றி, பணியாளர்கள் மற்றும் தலைவர்களை ஒன்றிணைக்கவும், அவர்களிடையே தகவல்தொடர்புகளை மேம்படுத்துவதற்காகவும், RTA ‘Ramadan Bazaar ‘ மற்றும் ‘Iftar Gathering’ போன்ற முன்முயற்சிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!