அமீரக செய்திகள்

அமீரகத்தில் தன்னார்வத் தொண்டு செய்ய விருப்பமா.? ஆர்வமுள்ளவர்கள் எப்படி பதிவு செய்வது.?

ஐக்கிய அரபு அமீரகத்தில் உதவி தேவைப்படுபவர்களுக்கு ஆதரவளிக்க பல்வேறு தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவ்வாறு நீங்களும் அமீரகத்தில் தன்னார்வத் தொண்டு செய்ய ஆர்வமாக இருக்கிறீர்களா? தன்னார்வத் தொண்டுக்கு சில பலன்களும் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஆம், தன்னார்வத் தொண்டு செய்பவர்களுக்கு அமீரகத்தில் பத்து வருடங்கள் தங்க அனுமதிக்கும் UAE கோல்டன் விசா கிடைக்கும். அதுமட்டுமின்றி, அமீரகத்தில் செயல்படும் குறிப்பிட்ட தளங்கள் தன்னார்வத் தொண்டு செய்வதில் ஆர்வமுள்ள நபர்களுக்கு பல்வேறு திட்டங்களையும் வழங்குகிறது.

மேலும், பயிற்சி வகுப்புகள், நன்கொடை அளிப்பதற்கான வாய்ப்புகள் மற்றும் நலவாரிய முயற்சிகளையும் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. அதனடிப்படையில் நீங்கள் தன்னார்வத் தொண்டு, நன்கொடை மற்றும் பிற முயற்சிகளுக்கு விண்ணப்பிக்க கூடிய பல்வேறு தளங்களின் பட்டியல் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

Volunteers.ae

இது ஒரு தேசிய தன்னார்வத் தளமாகும். நீங்கள் http://volunteers.ae இல் பதிவு செய்தவுடன், உங்களைப் பற்றி தொண்டு நிறுவனங்களுக்குத் தெரிய வரும். தனிநபர்கள், குழுவாகவோ அல்லது நிறுவனம் மூலமாகவோ பதிவு செய்யப்படலாம்.

மேலும், வகை, நிறுவனம் மற்றும் இருப்பிடத்தின் அடிப்படையில் வாய்ப்புகளைத் தேடவும் தன்னார்வலர்கள் இந்த இணையதளத்தைப் பயன்படுத்தலாம். ஒவ்வொரு வாய்ப்பிலும் தேவையான தன்னார்வலர்களின் எண்ணிக்கை மற்றும் தகுதிக்கான அளவுகோல் உள்ளிட்ட தகவல்கள் இருக்கும்.

எமிரேட்ஸ் ரெட் கிரசன்ட்:

UAE ரெட் கிரசன்ட் ஆணையம் International Federation of Red Crescent and Red Crossஇன் உறுப்பினராக உள்ளது. தன்னார்வத் தொண்டு செய்ய விரும்புபவர்கள் எமிரேட்ஸ் ரெட் கிரசண்ட்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யலாம் – https://www.emiratesrc.ae/

இதில் தொண்டு திட்டங்கள், மனிதாபிமான வழக்குகள், ஸ்பான்சர்ஷிப்கள், நன்கொடைகள் மற்றும் சுகுக் அல் கைர் (அபுதாபி இஸ்லாமிய வங்கியின் ஒத்துழைப்புடன் ஒரு எமிரேட்ஸ் ரெட் கிரசென்ட் முயற்சி) உட்பட பல வகைகளில் திட்டங்களை தன்னார்வலர்கள் அணுகலாம்.

அவசரநிலைகள், நெருக்கடிகள் மற்றும் பேரிடர்களுக்கான தேசிய தன்னார்வத் திட்டம்:

இந்த திட்டம் தேசிய அவசரகால நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் (NCEMA) தொடங்கப்பட்டது. திட்டத்தில் பங்கேற்பது மற்றும் பயிற்சிகளுக்கான பதிவு ஆகியவற்றை இணையதளம் மூலம் அணுகலாம் – https://www.ncema.gov.ae/en/home.aspx

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏற்படும் இயற்கைப் பேரிடர்கள், நெருக்கடிகள் மற்றும் அவசரநிலைகளின் போது பதிலளிப்பதில் பயிற்சி பெற்ற தன்னார்வலர்களின் குழுவை உருவாக்குவதை இந்த இணையதளம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

துபாய் தன்னார்வ மையம்:

‘Dubai Volunteering Center’ என்பது துபாயில் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை நிர்வகிக்க துபாய் அரசாங்கத்தின் ஒரு முறையான அமைப்பாகும். தன்னார்வலர்கள் தேதி, வகை மற்றும் தேடல் சொற்களின் அடிப்படையில் வாய்ப்புகளைத் தேட இந்த இணையதளத்தைப் பயன்படுத்தலாம் – https://www.cda.gov.ae/DubaiVolunteer/

ஷார்ஜா தன்னார்வ மையம்:

‘Sharjah Volunteering Center’ என்பது ஷார்ஜாவில் உள்ள தன்னார்வலர்களின் மிகப்பெரிய நெட்வொர்க் ஆகும். ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் நகரங்கள் மற்றும் நிறுவனங்களின் அடிப்படையில் வாய்ப்புகளைத் தேடலாம் மற்றும் பின்வரும் இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் – https://sssd-volunteer.shj.ae/register

துபாய் கேர்ஸ்:

துபாய் கேர்ஸ், முகமது பின் ரஷித் அல் மக்தூம் குளோபல் முன்முயற்சிகளின் ஒரு பகுதியாகும், இது ஐக்கிய நாடுகளின் உலகளாவிய தொடர்புத் துறையுடன் (United Nations Department of Global Communications) முறையாக தொடர்புடைய ஒரு சிவில் சமூக அமைப்பாகும்.

ஸ்பான்சர் அல்லது தன்னார்வத் தொண்டு மூலம் துபாய் கேர்ஸ் பிரச்சாரங்களில் பங்கேற்கலாம். அத்துடன் ஒவ்வொரு திட்டத்திற்கும் நாடு, பங்குதாரர் மற்றும் தன்னார்வத் தொண்டு செய்யும் தேதி போன்ற தகவல்களை அணுகவும் இந்த இணையதளத்தைப் பயன்படுத்தலாம். – https://www.dubaicares.ae/

சமூக பங்களிப்பு ஆணையம் (Ma’an):

இந்த ஆணையம் அபுதாபியில் தன்னார்வ சமூகத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த தளம் தன்னார்வலர்களை அவர்களின் இலக்குகளின் அடிப்படையில் திட்டங்களுக்கு விண்ணப்பிக்க உதவுகிறது, அத்துடன் தன்னார்வலர்களை ஆட்சேர்ப்பு செய்ய நிறுவனங்களை அனுமதிக்கிறது. ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் இந்த இணையதளத்தைப் பார்வையிடலாம் – https://maan.gov.ae/en/

Ma’an மூலம், தன்னார்வ குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் இரண்டும் நன்கொடைகள், தன்னார்வத் தொண்டு மற்றும் நிறுவனங்களுக்கான பெருநிறுவன சமூகப் பொறுப்பு ஆகியவற்றின் மூலம் பங்களிக்க முடியும்.

நன்மைகள்:

அமீரகத்தில் தன்னார்வத் தொண்டு செய்பவர்களுக்கு குறிப்பிட்ட அங்கீகாரம் கிடைக்கிறது, மனிதாபிமானப் பணிகளில் முன்னோடியாக இருக்கும் தன்னார்வலர்களும் கோல்டன் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான ஃபெடரல் அத்தாரிட்டியின் (ICP) தகுதி அளவுகோல்களின்படி, நீங்கள் பின்வரும் வகைகளில் ஒருவராக இருந்தால் நீங்கள் தகுதி பெறுவீர்கள்:

  • சர்வதேச மற்றும் பிராந்திய அமைப்புகளின் உறுப்பினர்கள், அல்லது அவற்றில் உள்ள புகழ்பெற்ற தொழிலாளர்கள், (5 ஆண்டுகளுக்கு குறையாத காலத்திற்கு).
  • பொது நன்மை சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் உறுப்பினர்கள் அல்லது அவற்றில் உள்ள புகழ்பெற்ற தொழிலாளர்கள் (5 ஆண்டுகளுக்கு குறையாத காலத்திற்கு).
  • மனிதாபிமானப் பணிகளில் நிபுணத்துவம் பெற்ற உள்ளூர், பிராந்திய அல்லது சர்வதேச நிறுவனங்களில் ஒன்றின் பாராட்டு விருதுகளைப் பெற்றவர்கள்.
  • 5 ஆண்டுகள் அல்லது 500 தன்னார்வ நேரங்களுக்கு குறையாத காலத்திற்கு, மனிதாபிமானப் பணித் துறையில் புகழ்பெற்ற தன்னார்வலர்கள்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!