அமீரக செய்திகள்

அமீரகத்தில் நேற்று பெய்த கனமழையில் சாலைகளில் ஆறு போல் ஓடிய மழைநீர்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று இடியுடன் கூடிய கனமழை இடைவிடாது தாக்கியதால், சில பகுதிகளில் உள்ள தெருக்கள் மற்றும் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

மேலும், இன்றும் மேகமூட்டமான வானிலை நீடிக்கும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) நாடு முழுவதும் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இத்தகைய சூழலில், சாலை விபத்துகளைத் தவிர்க்க கவனமாக இருக்கவும், விதிகளைப் பின்பற்றவும், வாகன ஓட்டிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையில், மழை தொடர்பாக வெளியான வீடியோக்களில், மழைவெள்ளம் ஆறுபோல் சூழ்ந்திருக்கும் சாலைகளில் கார்கள் செல்வதைக் காணலாம்.

இதேபோல், அமீரகத்தின் புயல் மையம் (Storm Centre) வெளியிட்ட வீடியோவில், பலத்த மழைக்கு நடுவே தண்ணீர் தேங்கியுள்ள சாலையின் நடுவில் சேற்று நீரை வெளியேற்றும் துளையானது நீரூற்றைப் போல் தோன்றுவதைக் காணலாம்.

பொதுவாகவே, அமீரகத்தில் மழை பெய்யும் போது மலைப் பகுதிகள் எப்போதும் அதிகம் பாதிக்கப்படும். மழைநீர் தாழ்வான நிலங்களுக்குப் பாய்வதால், பள்ளத்தாக்குகள் நிரம்பி ஆறுகளாக மாறுகின்றன. அந்தவகையில், மழையால் பாதிக்கப்பட்ட ஹத்தா மலைத்தொடரின் அடிவாரத்தில் நீர்ப் பெருக்கெடுத்து ஓடுவதை வீடியோவில் பார்க்கலாம்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!