அமீரக செய்திகள்

வீணான பொருட்களை இலவசமாக அகற்ற புதிய வாட்ஸ்அப் சேவையை தொடங்கியுள்ள துபாய்..!!

துபாய் முனிசிபாலிட்டி எமிரேட் முழுவதும் தூய்மையைப் பராமரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, வாட்ஸ்அப் சேனல் மூலம் தேவையற்ற வீணான பொருட்களை (bulk waste) அகற்றும் சேவையை இலவசமாக வழங்குகிறது. ஆகவே, குடியிருப்பாளர்களை அவர்களின் வளாகங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் இருந்து வீணான பொருட்களை அகற்ற அதன் இலவச சேவையைப் பயன்படுத்துமாறு முனிசிபாலிட்டி ஊக்குவிக்கிறது.

துபாய் முனிசிபாலிட்டி வெளியிட்ட அறிவிப்பின் படி, துபாய் முழுவதும் நியமிக்கப்பட்ட பகுதிகளில் குடியிருப்பாளர்கள் வீட்டு ஃபர்னிச்சர்கள் மற்றும் எலக்ட்ரிக்கல் அல்லது எலக்ட்ரானிக் கழிவுகள் போன்ற எஞ்சிய அல்லது மொத்த கழிவுகளை அகற்றுமாறு கழிவு மேலாண்மை துறையிடம் கோரலாம் என கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் அமீரகத்தை தாக்கிய கனமழையால், வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து வீட்டில் உள்ள பல பொருட்களை சேதப்படுத்தியதன் காரணத்தால், சில குடியிருப்பாளர்கள் தங்களின் சில பொருட்களை மீட்டெடுத்தாலும், மற்றவர்கள் தங்கள் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டியிருந்தது. ஆகவே, குடிமை அமைப்பின் இந்த முன்முயற்சி சரியான நேரத்தில் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இலவச சேவையை அணுகுவது எப்படி?

  1. 800900 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் இலவச சேவைக்கு விண்ணப்பிக்கவும்
  2. விண்ணப்ப ரசீதில் குறிப்பிடப்பட்ட தேதியிலிருந்து மூன்று நாட்களுக்குள் வீணான பொருட்களை சேகரிப்பதற்கான அப்பாய்மெண்ட்டை திட்டமிட துபாய் முனிசிபாலிட்டியின் பணியாளரிடமிருந்து குடியிருப்பாளர்கள் தொலைபேசி அழைப்பைப் பெறுவார்கள்.
  3. வீணாண பொருட்களின் சேகரிப்பு முடிந்ததும் மக்களுக்கு SMS அனுப்பப்படும்

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!