அமீரக செய்திகள்

ஈத் அல் ஃபித்ர்: அபுதாபியில் வானவேடிக்கைகளை எங்கெங்கே காணலாம்..??

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈத் அல் ஃபித்ரை கொண்டாட அறிவிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ விடுமுறையானது ஏப்ரல் 8, திங்கட்கிழமை முதல் தொடங்கிய நிலையில், குடியிருப்பாளர்கள் ஆண்டின் மிக நீண்ட விடுமுறையை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அனுபவிக்க தயாராகி வருகின்றனர்.

அமீரக அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பின்படி, நாட்டில் உள்ள ஊழியர்கள் ஏப்ரல் 14, ஞாயிறு வரை கொண்டாட்டங்களை அனுபவிப்பார்கள். மீண்டும் ஏப்ரல் 15 திங்கள் அன்று அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படத் தொடங்கும்.

இந்நிலையில், குடியிருப்பாளர்கள் ஈதியா பரிசுகள் எனும் பெருநாளுக்கான பரிசுகளை (Eidiya gift) வாங்குவதற்காக சந்தைகள் மற்றும் மால்களை நோக்கி படையெடுப்பதால் அனைத்து கடைகளும் மக்கள் கூட்டத்தால் சலசலக்கின்றன.

மேலும், பல குடியிருப்பாளர்கள் நீட்டிக்கப்பட்ட விடுமுறையை அனுபவிக்க விசா இல்லாத இடங்களுக்கு பயணங்களை மேற்கொள்கின்றனர். அதேநேரத்தில், தனிநபர்கள் சிலர் பணத்தை மிச்சப்படுத்தவும், ஐக்கிய அரபு அமீரகத்தில் பண்டிகைக் கொண்டாட்டங்களை ரசிக்கவும் விரும்புகிறார்கள்.

கூடுதலாக, துபாய் உட்பட பிற எமிரேட்களில் பல்வேறு நடவடிக்கைகள், பரிசுகளை வெல்வதற்கான வாய்ப்புகள் மற்றும் வானவேடிக்கை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. துபாயைப் போலவே, அபுதாபி எமிரேட் முழுவதும் ஈத் அல் பித்ருக்கான வானவேடிக்கை காட்சிகளின் வரிசையை தற்போது அறிவித்துள்ளது.

வானவேடிக்கை நடைபெறும் இடங்கள்:

  • அபுதாபி கார்னிச் – ஏப்ரல் 10, இரவு 9 மணி
  • யாஸ் பே, யாஸ் ஐலேண்ட் – ஏப்ரல் 10-12, இரவு 9 மணி
  • ஹுதைரியாத் ஐலேண்ட் – ஏப்ரல் 10, இரவு 9 மணி
  • ஹஸ்ஸா பின் சையத் ஸ்டேடியம் – ஏப்ரல் 10, இரவு 9 மணி
  • மதீனத் சையத் பப்ளிக் பார்க் – ஏப்ரல் 10, இரவு 9 மணி
  • அல் முகெய்ரா பே வாட்டர்ஃப்ரண்ட் – ஏப்ரல் 10, இரவு 9 மணி
  • கயாத்தி – ஏப்ரல் 10, இரவு 9 மணி

இவை தவிர, அல் மரியா ஐலேண்டில் உள்ள கலேரியா மாலுக்கு (Galleria Al Maryah Island) வருபவர்கள், லெவல் 2, நார்த் லிங்க் பிரிட்ஜில் உள்ள குடும்ப விளையாட்டு மைதானத்தில் ஏப்ரல் 14 வரை, தங்கள் விடுமுறை நாட்களை செலவிடலாம். இங்கு குடும்பத்தினர் ஒன்று கூடி, கால்பந்து விளையாட்டுகள், முக ஓவியம் மற்றும் மருதாணி உள்ளிட்ட பலவற்றை உள்ளடக்கிய எண்ணற்ற செயல்பாடுகளில் ஈடுபடலாம். இந்தக் காலக்கட்டத்தில், 1,000 திர்ஹம் மதிப்புள்ள கிஃப்ட் கார்டை வாங்கும் விருந்தினர்கள், அவர்களின் பயன்பாட்டிற்காக 100 திர்ஹம்ஸ் கார்டைப் போனஸாகப் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!