இன்னும் சில நாட்களில் முடியவுள்ள குளோபல் வில்லேஜ்.. சிறுவர்களுக்கு இலவச நுழைவை அறிவித்துள்ள நிர்வாகம்….

துபாயின் மிகவும் பிரபலமான பொழுதுபோக்கு தலமான குளோபல் வில்லேஜ், அதன் நடப்பு சீசனின் முடிவை நோக்கி நகரும் நிலையில், அதிகளவிலான குடும்பங்களை ஈர்க்கும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
குளோபல் வில்லேஜ் வெளியிட்ட சமீபத்திய அறிவிப்பின்படி, 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் இந்த குளோபல் வில்லேஸின் 28 வது சீசன் முடியும் வரை இலவச நுழைவை அனுபவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளோபல் வில்லேஜின் 28வது சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் 18 ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஆறு மாதங்களுக்குப் பிறகு எதிர்வரும் ஏப்ரல் 28 அன்று முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
இம்மாத இறுதியில் மூடப்படும் இந்த குளோபல் வில்லேஜ், அடுத்து கோடைகாலம் முடிந்து குளிர்காலம் ஆரம்பிக்கும் தருவாயில் அடுத்த சீசனுக்காக பார்வையாளர்களை வரவேற்க திறக்கப்படும். அந்தவகையில், அடுத்த அக்டோபரில் அடுத்த சீசனில் குளோபல் வில்லேஜ் அடியெடுத்து வைக்கும்.
தற்போதைய சீசனில், குளோபல் வில்லேஜில் ‘Value’ மற்றும் ‘Any Day’ என இரண்டு வகையான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. ‘வேல்யூ’ வகை டிக்கெட் ஞாயிறு முதல் வியாழன் வரை செல்லுபடியாகும் மற்றும் ‘எனி டே’ டிக்கெட்டுகள் மூலம் வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்கள் உட்பட வாரத்தின் எந்த நாளிலும் இலக்கை பார்வையிடலாம்.
ஒரு ‘வேல்யூ’ வகை டிக்கெட்டின் விலை 22.50 திர்ஹம்ஸ் மற்றும் ‘எனி டே’ டிக்கெட் ஒன்றின் விலை 27 திர்ஹம்ஸ் ஆகும். பொதுவாக, குளோபல் வில்லேஜ் பூங்காவில் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இலவச அணுகலைப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel