அமீரக செய்திகள்

UAE: முக்கிய சாலைகளில் வரவிருக்கும் 20 ஸ்மார்ட் கேட்கள்..!! வானிலை மற்றும் விபத்துகள் குறித்து எச்சரிக்கும் என்று எமிரேட் தகவல்..!!

ராஸ் அல் கைமாவில் போக்குவரத்தை மேம்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தற்பொழுது ராஸ் அல் கைமா முழுவதும் போக்குவரத்தைக் கண்காணிக்கும் ஸ்மார்ட் கேட்களை நிறுவும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. AI தொழில்நுட்பம் மூலம் செயல்படும் இந்த ஸ்மார்ட் கேட்கள் காவல்துறை செயல்பாட்டு அறையுடன் இணைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இத்தகைய ஸ்மார்ட் கேட்கள் விபத்துகள் மற்றும் அவசரநிலைகளுக்கு விரைவாக பதிலளிக்க காவல் துறைக்கு பெரும் உதவியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, ராஸ் அல் கைமாவில் இருக்கக்கூடிய முக்கிய சாலைகளில் 20 ஸ்மார்ட் கேட்கள் நிறுவப்படும் என்று ராஸ் அல் கைமா காவல்துறையின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் அலி அப்துல்லா பின் அல்வான் அல் நுவைமி என்பவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஸ்மார்ட் கேட்களில் சாலை விபத்துகளைக் கண்காணிக்க ஸ்மார்ட் கேமராக்களும், வானிலை அல்லது விபத்துகள் குறித்து வாகன ஓட்டிகளுக்குத் தெரிவிக்க ஸ்மார்ட் திரைகளும் பொருத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே, ராஸ் அல் கைமாவின் ‘Safe City Project’ என்ற திட்டத்தின் முதல் கட்டமாக எமிரேட்டின் பல்வேறு முக்கிய பகுதிகளில் ஸ்மார்ட் செக்யூரிட்டி மற்றும் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு மேம்படுத்தப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஸ்மார்ட் கேட்கள் நிறுவப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டத்தில் 10,000 ஸ்மார்ட் கேமராக்களின் நெட்வொர்க்குடன் கேட்களை ஒருங்கிணைக்கும் பணிகளும் அடங்கும் என கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, AI மூலம் பாதுகாப்பு அமைப்பைச் செயல்படுத்துவதே திட்டத்தின் ஒட்டுமொத்த நோக்கமாகும் எனதெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!