அமீரக செய்திகள்

கனமழைக்குப் பிறகு அமீரகத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளின் படங்களை வெளியிட்ட நாசா..!!

கடந்த செவ்வாய்க்கிழமை அமீரகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கொட்டித் தீர்த்த பெருமழையைத் தொடர்ந்து, அமீரகத்தில் உள்ள வெள்ளம் சூழ்ந்த பகுதிகளின் புகைப்படங்களை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது.

இது ஒரு “மெதுவாக நகரும் புயல்” (slow-moving storm) அமைப்பு என்று கூறிய நாசா, இது வளைகுடா நாடுகளைத் தாக்கியது என்றும், சில நகரங்களில் ஒரு வருடத்திற்கும் அதிகமான மழை பெய்தது என்றும் தெரிவித்துள்ளது.

அமீரகத்தில் ஏப்ரல் 19 அன்று நிலவிய சீரற்ற வானிலைக்குப் பிறகு, நாசாவின் லேண்ட்சாட் 9 (Landsat 9) செயற்கைக்கோள் முதல் முறையாக பிராந்தியத்தை கடந்து சென்றபோது சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் காட்சிகளை படம்பிடித்து அனுப்பியுள்ளது. குறிப்பாக, ஜெபல் அலியில் வெள்ளம் பெருக்கெடுத்ததை படம் காட்டியதாகவும் நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dubai on April 3
கனமழைக்கு முன்பாக நாசா எடுத்த செயற்கைக்கோள் புகைப்படம்

மேலும், நாசாவின் செயற்கைக்கோள் அனுப்பிய புகைப்படங்களில், துறைமுகத்திற்கு தெற்கே உள்ள ஜெபல் அலியின் தொழில்துறை பகுதியிலும், பாம் ஜெபல் அலிக்கு தெற்கே உள்ள பசுமையான ரிசார்ட்டுகள் மற்றும் பூங்காக்களுக்கு அருகிலும் வெள்ளம் சூழ்ந்திருப்பதைக் காணலாம்.

பொதுவாக, நாசாவின் லேண்ட்சாட் 9 செயற்கைக்கோளானது மனித வாழ்வைத் தக்கவைக்கத் தேவையான நில வளங்களைப் புரிந்துகொள்வதையும் நிர்வகிப்பதையும் கண்காணிக்கிறது.

Dubai on April 19
கனமழைக்கு பின்பாக நாசா எடுத்த செயற்கைக்கோள் புகைப்படம்

இது குறித்து குடிமை அமைப்பின் இயக்குநர் ஜெனரல் தாவூத் அல் ஹஜ்ரி ஊடகங்களிடம் பேசிய போது, துபாயில் இந்த வாரம் 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் 220 மிமீ மழை பெய்துள்ளதாகவும், இது ஒரு வருடத்தில் ஒரே நாளில் பெய்த மழையை விட கணிசமாக அதிகம் என்றும் தெரிவித்துள்ளார்.

அமீரகத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது, இருப்பினும் அரசாங்கம், பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களின் உடனடி முயற்சிகள் விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்ப உதவியது.

அபுதாபி:

தலைநகர் அபுதாபியின் சில பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதையும் Landsat 9 அனுப்பிய புகைப்படங்கள் காட்டுகிறது.

Before and after of Abu Dhabi
வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள துபாயின் செயற்கைக்கோள் புகைப்படம்

ஏப்ரல் 19 அன்று, துபாய் மற்றும் அபுதாபி வழியாக செல்லும் பிரதான சாலையான ஷேக் சையத் சாலை நீரில் மூழ்கியிருப்பதைக் காணலாம். Landsat 9 படங்கள் ஏப்ரல் 3 மற்றும் ஏப்ரல் 19 அன்று நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைக் காட்டுகின்றன.

அதேபோல், அபுதாபி நகரின் தென்கிழக்கே உள்ள குடியிருப்பு பகுதிகளான கலீஃபா சிட்டி மற்றும் சையத் நகரத்திலும் மழை வெள்ளம் தேங்கியிருக்கும் காட்சிகளையும் படம்பிடித்துள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!