துபாய் மெட்ரோ பயணிகள் ‘ஜபல் அலி’ நிலையத்தில் ரயில் மாற்றத்தைத் தவிர்க்க புதிய ஜங்க்ஷன்..!! ஏப்ரல் 15 முதல் பயன்பாட்டிற்கு வரும் என RTA அறிவிப்பு..!!
துபாயில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான பயணிகளை கையாளும் துபாய் மெட்ரோ ஆனது, அதன் பயணிகளின் வசதிக்காக ரெட் லைனில் ஒரு புதிய மெட்ரோ ரயில் சந்திப்பு முனையத்தை திறக்கவுள்ளதாக RTA தரப்பில் நேற்று ஏப்ரல் 3ம் தேதி, புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, ஜபல் அலி மெட்ரோ நிலையத்தில் பயணிகள் ரயில் மாற்றம் செய்வதற்கான தேவையை நீக்குவதற்காக ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் Y ஜங்க்சனை (மூன்று இரயில்கள் சந்திக்கும் இடம்) இயக்கும் என்று துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA)
ஆகவே, இனி சென்டர்பாயின்ட் மற்றும் UAE எக்ஸ்சேஞ் ஆகிய மெட்ரோ நிலையங்களுக்கு இடையே பயணிக்கும் மெட்ரோ பயணிகள், ஜபல் அலி இன்டர்சேஞ்ச் நிலையத்தில் இறங்கி ரயில்களை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இதை நடைமுறைப்படுத்துவதற்கு சில வாரங்களுக்கு முன்பாகவும் பின்பாகவும் பயணிகளுக்கு வழிகாட்டுவதற்காக கூடுதல் பணியாளர்கள் Y ஜங்சனில் நியமிக்கப்படுவார்கள் என்று RTA கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel