அமீரக செய்திகள்

UAE: வெள்ளநீர் கலந்ததால் நோய்வாய்ப்படும் குடியிருப்பாளர்களுக்கு இலவச சிகிச்சை.. சுகாதார மையங்கள் அறிவிப்பு..

அமீரகத்தின் அனைத்து எமிரேட்டிலும் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் இருந்து மீட்சியடைவதற்கான நடவடிக்கைகள் அந்தந்த அரசாங்களால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் தாக்கிய கனமழை பெரும்பாலான பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கடித்தது. இதனால் சாலைகளில் தேங்கியுள்ள மழை நீர், கழிவுநீரால் சூழப்பட்டுள்ள நிலையில், குடியிருப்பாளர்கள் அனைவரும் வெளியேற முடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

இவ்வாறு தேங்கியுள்ள அசுத்தமான மழைநீருக்கு மத்தியில் வசிப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வருவதாகவும் புகார்கள் வந்துள்ளன. குறிப்பாக, ரெயின்சப்போர்ட் (Rain support) போன்ற ஆதரவு வாட்ஸ்அப் குழுக்களில் மருத்துவ உதவிக்கான கோரிக்கைகள் நிரம்பி வழிகின்றன.

ஒரு குடியிருப்பாளர் மருத்துவ உதவி வேண்டி அனுப்பிய கோரிக்கையில், “குழாய் நீர் அழுக்காகவும் மாசுபட்டதாகவும் இருப்பதால் கட்டிடத்தில் நீர் விநியோகம் இல்லை; என் மகனுக்கு லூஸ் மோஷன் உள்ளது. வெளியில் உள்ள தண்ணீர் பச்சை நிறமாக மாறிவிட்டது மற்றும் பயங்கரமான துர்நாற்றம் வீசுகிறது” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஷார்ஜாவில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் ஆங்காங்கே தேங்கியுள்ள மழை வெள்ளம் காரணமாக நோய்வாய்ப்படும் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களக்கு இலவச மருத்துவ சேவைகளை வழங்குவதாக அறிவித்துள்ளன.

இத்தகைய மக்களுக்கு ஆதரவு வழங்குவதற்காகவே, கிங் ஃபைசல் ஸ்ட்ரீட்டில் (King Faisal Street) உள்ள பிரைம் ஸ்பெஷலிஸ்ட் மெடிக்கல் சென்டரின் சஃபீர் கிளை ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி வரை அவசர சேவைகளை வழங்கியுள்ளது. அங்கு தேவைப்படுபவர்கள் இலவசமாக மருந்துகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது.

இதற்கிடையில், அஸ்டர் டிஎம் ஹெல்த்கேர் (Aster DM Healthcare), வெள்ளம் காரணமாக சவால்களை எதிர்கொள்பவர்கள் குறித்து கவலை தெரிவித்ததுடன், “உங்கள் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு எங்கள் முன்னுரிமை” என்று வலியுறுத்தும் போஸ்டருடன் ஒரு லிங்க்கை வழங்கியுள்ளது.

மேலும், குடியிருப்பு வாசிகளின் தேவைகளைப் புரிந்துகொள்வதற்கும் பொருத்தமான உதவிகளை வழங்குவதற்கும் தன்னார்வலர்களுக்கு உதவ, வழங்கப்பட்ட லிங்க் மூலம் தனிநபர்கள் தங்கள் சூழ்நிலைகளின் விரிவான விளக்கங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

அவசரநிலை மற்றும் தன்னார்வத் தலைவர்களை தொடர்பு கொள்ள விரும்பும் தனிநபர்கள், பின்வரும் எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என ஆங்கில ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் விபரங்கள் பின்வருமாறு:

  • திரு. நிஹாத் அப்துல் நசீர் | திரு. ஜாசிம் ஜிகி: 971 55 337 9975 | 971 50 884 9725
  • திருமதி கௌலா அலி அப்துல்ரஹ்மான் அலி அல்ஷேஹி: 971 55 568 8661
  • திரு. சிராஜ் | திரு. ஆசிப் | திரு. பிரவீன்: 971 55 700 9099 | 971 55 700 9159 | 971 55 700 9279
  • திரு.பாரத்ராஜ் | திரு. ஷாபாத்: 971 52 605 7071 | 971 55 227

நீர் மூலம் பரவும் நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தொலைத்தொடர்பு சேவைகளின் விபரங்கள் பின்வருமாறு:

  • டாக்டர் பினு தாமஸ் (உள் மருத்துவம்) இரவு 9 மணி வரை: 971 50 788 9684
  • டாக்டர் சபீனா அலி அக்பர் (உள் மருத்துவம்) மாலை 6 மணி வரை: 971 50 637 9389
  • டாக்டர் சஃபருல்லா கான் (உள் மருத்துவம்) இரவு 9 மணி வரை: 971 50 590 6864
  • டாக்டர் சஜிதா பிரசாத் (குடும்ப மருத்துவம்) மாலை 6 மணி வரை: 971 56 181 8167
  • டாக்டர் ஜமாலுதீன் அபுபக்கர் (குழந்தை மருத்துவர்) இரவு 9 மணி வரை: 971 50 614 5882

இது தவிர, சஹாரா மெடிக்கல் சென்டரில் அல் நஹ்தாவில் உள்ள 105 அல் ஷைபா கட்டிடத்தில் மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், தேவைப்படுபவர்களுக்கு உதவுவதற்காக ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு ஜமால் அப்துல் நாசர் ஸ்ட்ரீட்டில் உள்ள பேஸ்மா டவரிலும் (Basemah Tower) மருத்துவ சேவை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!