அமீரக செய்திகள்

அரபு மற்றும் இஸ்லாமிய மக்களுக்கு ஈத் அல் பித்ர் வாழ்த்துகளைத் தெரிவித்த அமீரகத் தலைவர்கள்..!!

சவுதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளும் பல்வேறு இஸ்லாமிய நாடுகளும் ஏப்ரல் 10ஆம் தேதியான இன்று ஈத் அல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் வேளையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் உள்ளிட்டோர் அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களுக்கும் மக்களுக்கும் ஈத் அல் பித்ர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக அமீரக ஜனாதிபதி ஷேக் முகமது அவர்கள், தலைவர்கள் மற்றும் மக்களின் தொடர்ச்சியான முன்னேற்றம், செழிப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கும் வாழ்த்துவதாகக் கூறியுள்ளார்.

மேலும், துணை ஜனாதிபதி, துணைப் பிரதமர் மற்றும் ஜனாதிபதி நீதிமன்றத்தின் தலைவர் ஷேக் மன்சூர் பின் சயீத் அல் நஹ்யான் அவர்களும் அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களுக்கு ஈத் திருநாள் வாழ்த்துச் செய்திகளைப் பகிர்ந்து கொண்டார்.

இதனிடையே, துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷித் அவர்கள் தனது தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் வெளியிட்ட பதிவில், அமீரக மக்களுக்கும், அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கும் ஈத் அல் பித்ர் வாழ்த்துகளைக் கூறியுள்ளார்.

இது தொடர்பான அவரது பதிவில், “UAE மக்களுக்கும், அனைத்து அரபு மற்றும் இஸ்லாமிய மக்களுக்கும் ஈத் அல் பித்ர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். கடவுள் அதை எங்களுக்கும் உங்களுக்கும் நல்ல மற்றும் ஆசீர்வாதங்களுடன் திருப்பித் தரட்டும். நற்குணத்தின் மாதத்தில் அனைவரின் செயல்களையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக. ஈத் வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இவர்களுடன் துபாயின் பட்டத்து இளவரசரும், நிர்வாகக் குழுவின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களும், பண்டிகை நாளை முன்னிட்டு UAE தலைமைக்கும், உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட X பதிவில், “ஈத் அல் பித்ர் தினத்தில் எங்கள் தலைமை, எங்கள் மக்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் நாங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இது அனைவருக்கும் மகிழ்ச்சி, ஆசீர்வாதம் மற்றும் செழிப்பைக் கொண்டுவரட்டும்” என்று எழுதியுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!