UAE: அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை முடிந்த பிறகு கூடுதல் நாட்கள் விடுப்பு எடுத்ததால் முதலாளி சம்பளத்தைப் பிடித்தம் செய்யலாமா..?? அமீரக சட்டம் சொல்வது என்ன..???

ஐக்கிய அரபு அமீரகத்தைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் அவசரநிலை காரணமாக வருடாந்திர விடுப்பை நீட்டித்ததற்காக முதலாளி ஊழியரின் சம்பளத்தைப் பிடித்தம் செய்யலாமா? நிறுவனம் ஊழியரின் வருடாந்திர விடுப்பை சரிசெய்ய மறுத்தால், ஊழியர் முதலாளிக்கு எதிராக புகார் செய்யலாமா? இத்தகைய சூழலை நீங்களும் எதிர்கொண்டால் ஐக்கிய அரபு அமீரகத்தின் வேலைவாய்ப்பு உறவுகளின் சட்டம் என்ன சொல்கிறது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகும்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் சரியான காரணம் ஏதுமின்றி விடுமுறை முடிந்த பிறகு வேலைக்குச் செல்லாத ஊழியர் அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை காலாவதியான பிறகு பணிக்குத் திரும்பாத காலம் முழுவதும் அவரது சம்பளத்திற்கு உரிமை கோர முடியாது என்று 2021 ஆம் ஆண்டின் ஃபெடரல் ஆணை எண். 33 இன் வேலைவாய்ப்பு உறவுகளின் ஒழுங்குமுறை சட்டத்தின் 34 வது பிரிவில் கூறப்பட்டுள்ளது.
மாறாக, முதலாளி மற்றும் ஊழியர் ஆகிய இருவரும் ஒப்புக்கொண்டால், ஊழியர் நிறுவன விதிகளின் அடிப்படையில், தனது வருடாந்திர விடுப்பு நிலுவை அல்லது அதன் நாட்களை அடுத்த ஆண்டுக்கு எடுத்துச் செல்லலாம். இது ஐக்கிய அரபு அமீரக வேலைவாய்ப்புச் சட்டத்தின் பிரிவு 29(5) க்கு இணங்க உள்ளது.
எவ்வாறாயினும், ஒரு ஊழியர் தனது அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை நாட்கள் முடிந்தவுடன் கூடுதல் விடுமுறை எடுக்கும் பட்சத்தில், தனது வருடாந்திர விடுப்பின் இருப்பை சரிசெய்ய முடியுமா என்பது குறித்து அமீரக வேலைவாய்ப்புச் சட்டம் அல்லது அதன் அடுத்தடுத்த அமைச்சகத் தீர்மானங்களில் குறிப்பிடப்படவில்லை.
எனவே, ஒரு ஊழியரின் அங்கீகரிக்கப்பட்ட விடுப்பு முடிந்தவுடன் கூடுதல் விடுமுறைக்கு அவரது சம்பளம் கழிக்கப்படாது என்பதை முதலாளி எழுத்துப்பூர்வமாக உறுதி செய்யவில்லை என்றால், கூடுதலாக எடுத்த விடுப்புக்கு ஊழியரின் சம்பளத்தை முதலாளி பிடித்தம் செய்யலாம்.
இருப்பினும், உங்கள் முதலாளியின் மனிதவளக் கொள்கையில், அவசரகாலத்தில் அங்கீகரிக்கப்பட்ட வருடாந்திர விடுப்பு முடிந்தவுடன், முதலாளி உடனடியாக கூடுதல் விடுப்பைப் பெறலாம் என்று குறிப்பிட்டு, அத்தகைய விடுப்பு பின்னர் சரிசெய்யப்பட்டால், ஊழியர் எடுக்கும் அவசரகால விடுப்புக்காக முதலாளி அவரது சம்பளத்தை பிடித்தம் செய்யக் கூடாது.
எனவே, இத்தகைய சூழலில் ஊழியர் முதலாளியை அணுகி, அங்கீகரிக்கப்பட்ட வருடாந்திர விடுப்பு முடிந்த பிறகு கூடுதலாக எடுத்த அவசரகால விடுப்புக்காக சம்பளத்தை பிடிக்க வேண்டாம் என்றும், இன்னும் எடுக்காத வருடாந்திர விடுப்புடன் அதைச் சரிசெய்யுமாறும் கோரிக்கை வைப்பது சுமூகமான தீர்வை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel