அமீரக செய்திகள்

UAE: ஆடைகள் முதல் மின்சாதனப் பொருட்கள் வரை மிக மலிவான விலையில் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்..!!

துபாய் என்றாலே ஆடம்பர ஷாப்பிங் மால்களுக்கு பெயர் பெற்ற நகரம் என்பது அனைவருக்கும் தெரியும். அதே துபாயில், ஆடைகள் முதல் மின்சாதனப் பொருட்கள் வரை மிக மலிவான விலையில் செகண்ட் ஹேண்ட் ஷாப்பிங் செய்யலாம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், ஏற்கனவே பயன்படுத்திய அல்லது ஒதுக்கப்பட்ட பொருட்களை விற்கும் இடமாக துபாய் ஃப்ளீ மார்க்கெட் (Dubai Flea Market) இருந்து வருகிறது.

அதாவது, வீட்டுப் பொருட்கள், பொம்மைகள், புத்தகங்கள், மின்சாதனப் பொருட்கள் மற்றும் நல்ல நிலையில் இருக்கும் ஆடைகள் என அனைத்தையும் விற்கவும் வாங்கவும் ஒரு சந்தையாக துபாய் ஃப்ளீ மார்க்கெட் உள்ளது. துபாயில் உள்ள ஜபீல் பார்க், டிஸ்கவரி கார்டன்ஸ், அல் பர்ஷா, மற்றும் சிலிக்கான் ஒயாசிஸ் நார்த் பார்க் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாதத்திற்கு பல முறை இந்த சந்தை நடத்தப்பட்டுள்ளது.

2007 இல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், சுமார் 16 ஆண்டுகளுக்கும் மேலாக துபாயில் இயங்கி வருவதாக அதன் நிறுவனர் மெலனி பீஸ் (Melanie Beese) என்பவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்நிறுவனத்தின் சார்பாக அமைக்கப்பட்டுள்ள ஜபீல் பார்க் சந்தை 250 ஸ்டால்கள் மற்றும் 7,000 கடைக்காரர்களை ஈர்க்கும் அதே நேரத்தில் 15,000 வாடிக்கையாளர்களையும் ஈர்த்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

துபாய் ஃப்ளீ மார்க்கெட் குறித்து அவர் மேலும் கூறும் போது, 2007 இல் நாங்கள் முதன்முதலில் சந்தையை தொடங்கியபோது, ​​ஐக்கிய அரபு அமீரகத்தில் செகண்ட் ஹேண்ட் ஷாப்பிங் கடைகள் இல்லை, மேலும் ஃப்ளீ மார்க்கெட் புதியதாகவும் உற்சாகமாகவும் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும், தொடர்ந்து பேசிய அவர், ஒவ்வொரு மாதமும் பல வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் திரும்பி வருவதாகவும், இப்போது அபுதாபிக்கு விரிவாக்கம் செய்த பிறகு முதல் நிகழ்வு ஒரு வாரத்தில் விற்றுத் தீர்ந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஃப்ளீ மார்க்கெட்களின் சிறப்பு:

ஐக்கிய அரபு அமீரகத்தில் பன்னாட்டு மக்கள் வசித்து வருவதால், உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் அற்புதமான வீட்டுப் பொருட்களையும் பிற பொருட்களையும் குறைந்த விலையில் வாங்கலாம். இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இது பொதுவாக தூக்கி எறியப்படும் பொருட்களை மீண்டும் பயன்படுத்துவதற்கும் மறுசுழற்சி செய்வதற்கும் ஒரு சிறந்த வழியாகும்.

அதுமட்டுமில்லாமல், ஃபிளீ மார்க்கெட் மிகவும் நட்பு சூழ்நிலையைக் கொண்டுள்ளது, இது வாடிக்கையாளர்கள் மற்றும் கடைக்காரர்களுக்கு நண்பர்களை உருவாக்கவும் சமூகத்தில் தங்களை ஒருங்கிணைக்கவும் உதவியதாகவும், நிறுவனத்தின் ஸ்டால்ஹோல்டர்களில் சுமார் 40 சதவீதம் பேர் ரெகுலர்களாக இருப்பதாகவும் பீஸ் கூறியுள்ளார்.

எப்போது, ​​எங்கு நடைபெறுகிறது?

முதன்மையான ஜபீல் பார்க் சந்தை ஆண்டு முழுவதும் நடத்தப்படுகிறது, கோடையில் மாதத்தின் முதல் சனிக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், குளிர்காலத்தில் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரையிலும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மற்ற ஃபிளீ மார்க்கெட்களின் நேரம் மாதத்திற்கு மாதம் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, சந்தை திறக்கப்பட்டதும் வாடிக்கையாளர்கள் காலை 8 மணிக்கு முன்பே வரிசையில் நிற்கத் தொடங்குவார்கள் என்று கூறிய பீஸ், எனவே, சீக்கிரம் வருவது நல்லது என்று பரிந்துரைத்துள்ளார். இருப்பினும், இறுதியாக வாங்கும் போது இன்னும் மலிவான விலையில் பொருட்களை வாங்கலாம் என்று வலியுறுத்தியுள்ளார். சந்தைக்கு நுழைவு பொதுவாக இலவசம் என்றாலும், சில நிகழ்வுகளுக்கு சிறிய கட்டணம் விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சந்தையின் விதிகள் என்ன?

  • விற்பனையாளர்களுடன் பேரம் பேசுவது அனுமதிக்கப்படுகிறது, ஆனால்  வாடிக்கையாளர்கள் நியாயமாக பேரம் பேசுமாறு பீஸ் வலியுறுத்தியுள்ளார்.
  • போலியான பொருட்கள், வாசனை திரவியங்கள், அழகுசாதனப் பொருட்கள், தாவரங்கள் மற்றும் மத அடையாளங்களைக் கொண்ட பொருட்கள் அனைத்தும் தடைசெய்யப்பட்டுள்ளன, மேலும் மார்க்கெட் ஊழியர்கள் இதை கண்காணிக்க ஸ்டால்களில் ரோந்து செல்கின்றனர்.
  • விற்கப்படும் பொருட்களின் நிபந்தனைகள் குறித்து எந்த விதிமுறைகளும் இல்லை. புதிய ஆடைகள் முதல் தலைமுறைகளாகக் கடந்து வந்த பழங்காலப் பொருட்கள் வரை அனைத்தையும் நீங்கள் காணலாம்.

சந்தையில் விற்பனையாளராவது எப்படி?

நீங்கள் சந்தையில் விற்பனையாளராக வேண்டுமெனில், இணையதளம் வழியாக முன்பதிவு செய்யலாம் மற்றும் ஸ்டாண்டுகளுக்கு 290 திர்ஹம்ஸ் கட்டணம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு கடையிலும் குறைந்தது இரண்டு பேர் இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!