அமீரக செய்திகள்

துபாய்: சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் மற்றும் பாதசாரிகளுக்கான 2 பாலங்களை உள்ளடக்களிய புதிய பாதை அறிவிப்பு!! RTA வெளியிட்ட தகவல்…

துபாயின் பட்டத்து இளவரசரும் துபாயின் நிர்வாக சபையின் தலைவருமான மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் உத்தரவின் படி, துபாயை சைக்கிள் பயன்பாட்டிற்கு உகந்த நகரமாக மாற்ற சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) மிதிவண்டிகள், ஸ்கூட்டர்கள் மற்றும் பாதசாரிகளுக்கு ஏற்றவாறு புதிய 13.5 கிமீ நீளமுள்ள பாதையை அமைக்க உள்ளது.

ஹெஸ்ஸா ஸ்ட்ரீட் வழியாக அல் சுஃபூவை துபாய் ஹில்ஸுடன் இணைக்கும் இந்தப் புதிய பாதையில் ஷேக் சையத் சாலை மற்றும் அல் கைல் சாலையைக் கடக்கும் இரண்டு பாலங்களும் உள்ளன என கூறப்பட்டுள்ளது. இது குறித்து RTA, நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவர், இயக்குநர் ஜெனரல் மட்டர் அல் டேயர் கூறுகையில், “சைக்கிள் ஓட்டுபவர்கள், ஸ்கூட்டர் ஓட்டுபவர்கள் மற்றும் பாதசாரிகளுக்காக நியமிக்கப்பட்ட இந்த பாதை RTA ஆல் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ஹெஸ்ஸா ஸ்ட்ரீட் மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாகும்” என்று தெரிவித்துள்ளார்.

13.5 கிமீ நீளமும் 4.5 மீட்டர் அகலமும் கொண்ட இந்த பல பயன்பாட்டு பாதையானது, அல் பர்ஷா மற்றும் அல் பர்ஷா ஹைட்ஸ் போன்ற சுற்றுப்புறங்களில் சேவை வசதிகளுடன் கூடுதலாக 12 குடியிருப்பு, வணிக மற்றும் கல்வி பகுதிகளுக்கு சேவை செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், துபாய் இன்டர்நெட் சிட்டி மெட்ரோ நிலையம் மற்றும் அருகிலுள்ள பிற ஹாட்ஸ்பாட்களுடன் இணைக்கும் முதல் மற்றும் கடைசி மைல் பயணங்களுக்கான இணைப்பை மேம்படுத்தும் வகையில் இந்த பாதை வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், பாதையின் திறன் ஒரு மணி நேரத்திற்கு 5,200 பயனர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அல் தயர் கூறியுள்ளார்.

Architectural design for a Bridge passing over Al Khail Road

புதிய பாலங்கள்

புதிய பாதையில் ஷேக் சயீத் சாலையின் மீது 528 மீட்டர் நீளத்திற்கும், அல் கைல் சாலையின் மீது 501 மீட்டர் நீளத்திற்கும் தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட இரண்டு பாலங்களும் அடங்கும். ஒவ்வொரு பாலமும் 5-மீட்டர் அகலம் கொண்டது (சைக்கிள் மற்றும் இ-ஸ்கூட்டர்களுக்கு 3 மீட்டர் மற்றும் பாதசாரிகளுக்கு 2 மீட்டர்) என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

Layout showing the cycling track as part of Hessa Street Improvement Project

ஹெஸ்ஸா திட்டம்

ஹெஸ்ஸா ஸ்ட்ரீட் மேம்பாடு திட்டம், அல் சுஃபு 2, அல் பர்ஷா மற்றும் ஜுமைரா வில்லேஜ் டிஸ்ட்ரிக்ட் போன்ற பல முக்கிய குடியிருப்பு மற்றும் மேம்பாட்டு சமூகங்களுக்கு சேவை செய்யும் முக்கிய சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களில் ஒன்றாகும்.

2030 ஆம் ஆண்டில், இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 640,000க்கும் மேற்பட்ட மக்கள் தொகைக்கு சேவை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஹெஸ்ஸா ஸ்ட்ரீட்டின் கொள்ளளவை 100% இரட்டிப்பாக்க, இரு திசைகளிலும் ஒரு மணி நேரத்திற்கு 16,000 வாகனங்களாக அதிகரிக்க திட்டம் அமைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

The cycling bridge on the Sheikh Zayed Road

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!