அமீரக செய்திகள்

துபாயிலிருந்து அபுதாபி ஏர்போர்ட்டிற்கு இயக்கப்படும் 24/7 ஷட்டில் பேருந்து சேவை..!! முன்பதிவு செய்வது எப்படி??

நீங்கள் துபாயில் இருந்து அபுதாபியில் உள்ள சையத் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்ல வேண்டுமா? இருப்பினும், போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளாமலும், அதிக கட்டணம் வசூலிக்கும் டாக்ஸிகளைத் தவிர்த்தும் வசதியாகவும் மலிவு விலையிலும் விமான நிலையத்திற்கு பயணிக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் துபாய் மற்றும் சையத் சர்வதேச விமான நிலையத்திற்கு இடையே இயக்கப்படும் 24/7 ஷட்டில் பேருந்து சேவையை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும், இந்த 24 மணிநேர எக்ஸ்பிரஸ் பேருந்து சேவையானது, துபாய் மற்றும் சையத் சர்வதேச விமான நிலையத்திற்கு இடையில் எந்த நிறுத்தத்திலும் நிற்காமல் நேரடியாக இயக்கப்படுகிறது. எனவே, நீங்கள் ஆன்லைனில் முன்கூட்டியே டிக்கெட் பதிவு செய்வதன் மூலமாகவும், விமான நிலையத்தில் டிக்கெட் வாங்குவதன் மூலமாகவும் இந்த பேருந்தில் பயணிக்கலாம்.

24/7 கிடைக்கும் பேருந்து சேவை:

சையத் விமான நிலையத்தின் சார்பாக வாரம் முழுவதும் இயக்கப்படும் இந்த ஷட்டில் பேருந்து சேவையானது, பயணிகளின் வருகை அல்லது புறப்படும் நேரத்தைப் பொருட்படுத்தாமல், அவர்களின் அதிகபட்ச வசதிக்காக ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை துபாய் மற்றும் அபுதாபி இடையே இயக்கப்படுகிறது.

எங்கிருந்து ஷட்டில் பேருந்தில் ஏறுவது?

துபாயில் இபின் பதூதா மெட்ரோ நிலையம் மற்றும் இபின் பதூதா மால் ஆகியவற்றிற்கு அருகே உள்ள பேருந்து நிலையத்திலிருந்து ஒவ்வொரு மணி நேரமும் இந்த பேருந்து புறப்படுகிறது. இது சையத் சர்வதேச விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்தில் (departure terminal) பயணிகளை இறக்கி விடும்.

ஷட்டில் பஸ் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது எப்படி

நீங்கள் ஒரு சில கிளிக்குகளில் இந்த 24/7 ஷட்டில் பேருந்தில் உங்கள் இருப்பிடத்தை முன்பதிவு செய்யலாம்.

1. நீங்கள் முதலில் சையத் சர்வதேச விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும் – http://www.zayedinternationalairport.ae/en/Transport/Airport-shuttle பின்னர், விமான நிலைய ஷட்டில் பிரிவின் கீழ் உள்ள ‘Book’ என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும்.

2. அடுத்தபடியாக, நீங்கள் துபாயிலிருந்து சையத் சர்வதேச விமான நிலையத்திற்குப் பயணிக்கிறீர்களா அல்லது அபுதாபி ஏர்போர்ட்டிலிருந்து பயணிக்கிறீர்களா என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பிறகு, உங்கள் பயண தேதியை உள்ளிட்டு, ‘Book Now’  பொத்தானைக் கிளிக் செய்யவும்.

3. அதைத் தொடர்ந்து, உங்கள் முழுப் பெயரை உள்ளிடவும். உங்களுடன் பயணிக்கும் கூடுதல் பயணிகளைச் சேர்க்கும் விருப்பம் உங்களுக்கு உள்ளது. அதன்பிறகு உங்கள் டிக்கெட்டை டெலிவரி செய்வதற்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியை நிரப்பவும்.

5. இறுதியாக, ஷட்டில் பஸ் கட்டணத்தைச் செலுத்த உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு விவரங்களை உள்ளிடவும். உங்கள் கட்டணம் உறுதிசெய்யப்பட்டதும், உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு நேரடியாக டிஜிட்டல் டிக்கெட்டைப் பெறுவீர்கள். பேருந்தில் ஏறும் போது அதைக் காட்ட வேண்டும்.

இபின் பதூதா மற்றும் சையத் இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டிற்கு இடையில் எவ்வித நிறுத்தமும் இல்லாமல் நேரடியாக பயணிக்கும் இந்த 24/7 பேருந்தில் பயணிக்க, ஒரு நபருக்கு 35 திர்ஹம்ஸ் ஒரு வழி பயண கட்டணமாக வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!