அமீரக செய்திகள்

உலகின் முன்னணி நகரமாக நிலைநிறுத்திக் கொள்ள துபாய் மேற்கொள்ளும் நான்கு முக்கிய வளர்ச்சி திட்டங்கள்..!!

சுமார் மூன்று தசாப்தங்களுக்கு முன்பு, ஒரு சிறிய பாலைவன நகரமாக இருந்த துபாய், இன்று ஆடம்பர ஷாப்பிங், உலகின் மிக உயரமான வானுயர் கட்டிடங்கள், மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கைத் தீவுகள், உலக வரத்தகத்தின் மையம் என பிரம்மாண்டங்களுக்கு குறையில்லாமல் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகளையும் முதலீட்டாளர்களையும் உலகெங்கிலும் இருந்து ஈர்த்து வருகிறது.

மேலும், பல்வேறு புரட்சிகர மற்றும் தொலைநோக்கு திட்டங்களுடன் குறுகிய கால இடைவெளியில் உலகின் மிக முக்கிய நகரங்களை விடவும் துபாய் அசுர வளர்ச்சியையும் கண்டுள்ளது. அவ்வாறு பல்வேறு துறைகளில் அசுர வளர்ச்சியைக் கண்டிருக்கும் துபாய் தனது முன்னணி நகரமாக நிலைநிறுத்திக் கொள்வதற்காக இன்னும் சில வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான நான்கு வளர்ச்சி திட்டங்கள் குறித்து கீழே காணலாம்.

உலகின் மிகப்பெரிய விமான நிலையம்:

துபாயில் இருக்கக்கூடிய அல் மக்தூம் இன்டர்நேஷனல் (AMI) விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கம் கடந்த ஏப்ரல் 28ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த விரிவாக்கப் பணிகள் முடிந்ததும், அல் மக்தூம் விமான நிலையம் துபாய் சர்வதேச விமான நிலையத்தை (DXB) விட ஐந்து மடங்கு பெரியதாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.

இது முழுமையாக செயல்படத் தொடங்கியதும் ஆண்டுக்கு 260 மில்லியன் பயணிகளைக் காணும் என்றும், இதனால் துபாயின் சுற்றுலா மேம்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விமானப் போக்குவரத்துத் துறையில் இதுவரை பயன்படுத்தப்படாத தொழில்நுட்பங்களை இந்த விமான நிலையம் பயன்படுத்துவதால் பயணிகள் மத்தியில் எதிர்பார்ப்புகள் வலுத்து வருகின்றன.

இது தொடர்பாக வெளியான தகவல்களின் படி, புதிய விமான நிலையத்தில் ஐந்து இணையான ஓடுபாதைகள் மற்றும் 400 க்கும் மேற்பட்ட விமான வாயில்களைக் கொண்ட ஐந்து பயணிகள் டெர்மினல்கள் இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், 10 ஆண்டுகளுக்குள், DXB இன் அனைத்து செயல்பாடுகளும் படிப்படியாக AMI க்கு மாற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

2. தேசிய ரயில் நெட்வொர்க்:

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய ரயில் நெட்வொர்க் அமைப்பான எதிஹாட் ரயில், நாடு முழுவதும் பயணிகள் ரயில் சேவையைத் தொடங்கவிருப்பதால், துபாய்வாசிகள் மற்ற எமிரேட்களுக்கு வேகமாகவும் எளிதாகவும் மிக விரைவில் பயணிக்கலாம்.

இந்த பயணிகள் ரயில் அமீரகத்தில் உள்ள 11 நகரங்கள் மற்றும் பிராந்தியங்களை இணைப்பதால், குடியிருப்பாளர்களை எளிதாகவும் வசதியாகவும் பயணிக்க அனுமதிக்கிறது. இது துபாய், அபுதாபி மற்றும் அல் ருவைஸ், அல் மிர்ஃபா, ஷார்ஜா மற்றும் அல் தைத் உள்ளிட்ட அல் சிலா மற்றும் ஃபுஜைரா பகுதிகள் முழுவதும் நீண்டுள்ளதால் அமீரகத்தின் பல்வேறு எமிரேட்டுகளிலும் உள்ள மக்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகின்றது.

3. பறக்கும் டாக்ஸிகள்:

உலகின் பல முன்னணி நகரங்களும் போக்குவரத்து நெரிசலுக்கான தீர்வுகளை ஆராய்ந்து வருகின்ற நிலையில், துபாய் பறக்கும் டாக்ஸி சேவையைத் தொடங்குவதற்கான திட்டத்தில் தீவிரமாக வேலை செய்து வருகிறது. வெகுவிரைவில் துபாய்க்கு வரவிருக்கும் ஏர் டாக்ஸி சேவையானது, அபுதாபி மற்றும் துபாய் இடையே பயண நேரத்தை வெறும் 30 நிமிடங்களாக குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் வெளியான செய்திகளின் படி, அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனமான Joby Aviation, 2025 அல்லது 2026 இன் தொடக்கத்தில் விமான டாக்சிகளின் செயல்பாடுகளை துபாயில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஏர் டாக்ஸி சேவை பிற எமிரேட்களுக்கும் விரிவுபடுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

4. 20 நிமிட நகரம்

துபாயின் இந்த முன்முயற்சியானது, பாதசாரிகள், சைக்கிள் மற்றும் போக்குவரத்து பயணங்கள் மூலம், நடந்தோ அல்லது சைக்கிள் மூலமாகவோ 20 நிமிடங்களுக்குள் தங்களுடைய இலக்குகளை அடைய அனுமதிக்கிறது. துபாய் 2040 நகர்ப்புற மாஸ்டர் பிளான் எனப்படும் இந்த திட்டம் 55 சதவீத குடியிருப்பாளர்களை வெகுஜன போக்குவரத்து நிலையங்களில் இருந்து 800 மீட்டர் தொலைவில் தங்களது தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அவர்களின் தினசரி தேவைகள் மற்றும் இலக்குகளில் 80 சதவீதத்தை அடையவும் அனுமதிக்கிறது.

இதற்கிடையில், வாகனம் ஓட்டாத பயணிகளுக்கு இடமளிக்கும் விதமாக, துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) 2024-2030க்கான அதன் மூலோபாயத் திட்டத்தைப் புதுப்பித்துள்ளது. RTA இன் இத்திட்டம் சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைப்புகளின் வளர்ச்சியை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!