அமீரக செய்திகள்

அமீரகத்தில் கடுமையான முடி உதிர்தல் நிலைக்கு புதிய சிகிச்சை..!! இளம் வயதுடையவர்களுக்கு பெரிதும் உதவும் எனத் தகவல்..

ஐக்கிய அரபு அமீரகத்தில் முடி உதிர்தலால் பாதிப்புக்குள்ளாகும் இளம் வயதுடையவர்களுக்கு உதவும், ‘அலோபீசியா அரேட்டா’ (alopecia areata) எனப்படும் குணப்படுத்த முடியாத முடி உதிர்வு நிலைக்கான சிகிச்சையில் முன்னேற்றம் இருப்பதாக அமெரிக்க பன்னாட்டு மருந்து மற்றும் பயோடெக்னாலஜி நிறுவனமான ‘Pfizer’ தெரிவித்துள்ளது.

அமீரகத்தில் வசிக்கும் இளம் குடியிருப்பாளர்களிடையே அதிகரித்து வரும் கடுமையான முடி உதிர்வு பிரச்சனைக்கு, இந்த புதிய தினசரி வாய்வழி காப்ஸ்யூல் எதிர்ப்புசக்தி நோயால் (autoimmune disease) வரும் சவால்களுடன் வாழும் நோயாளிகளுக்கு நம்பிக்கையை அளிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அலோபீசியா அரேட்டா என்பது ஒரு ஆட்டோ இம்யூன் கோளாறு ஆகும், இதில் நம் உடலை தீங்கிழைக்கும் கிருமிகளிடமிருந்து பாதுகாக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு, தவறுதலாக நம் மயிர்க்கால்களை தாக்குகிறது, இதன் விளைவாக இளம் வயதுடைய சிறுவர்களுக்கு முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படுகிறது.

இது குறித்து எமிரேட்ஸ் டெர்மட்டாலஜி சொசைட்டியின் அறிவியல் குழுத் தலைவர் டாக்டர் ஃபாத்திமா அல்ப்ரீகி கூறுகையில், உடல் வெளிப்பாடுகள் மட்டுமின்றி, முடி உதிர்தலினால் ஏற்படும் உணர்ச்சித் தாக்கத்தையும் நிவர்த்தி செய்யும் மேம்பட்ட சிகிச்சைகளை நம்புவதாகவும், அமீரகத்தில் இந்த சிகிச்சையை அறிமுகப்படுத்துவது நோயாளிகளுக்கான சிகிச்சை விருப்பங்களில் ஒரு நம்பிக்கைக்குரிய முன்னேற்றத்தைக் குறிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இது பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மாற்றும் திறன் கொண்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து, ஃபைசரின் வளைகுடா கிளஸ்டர் லீட் செர்ஹாட் யால்சின்காயா என்பவர் பேசிய போது, கடுமையான அலோபீசியா அரேட்டா சிகிச்சையில் இந்த புதிய முன்னேற்றம் தற்போது 12 வயதிற்குட்பட்ட நோயாளிகளுக்கு ஒரு முக்கியமான மைல்கல் என்றும் தெரிவித்துள்ளார்.

அமீரகத்தை பொருத்தவரை முடி உதிர்வு என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என பலருக்கும் ஒரு பெரிய சவாலான பிரச்சனையாகும். அரபு நாடுகளில் நிலவும் வெப்பம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட நீரே இதற்கான காரணம் என பொதுவாக கூறப்பட்டாலும், மன அழுத்தமும் இதற்கு முக்கிய காரணம் என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!