அமீரக செய்திகள்

துபாய்க்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு வழங்கப்படும் 5 சிறப்பு சலுகைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு..??

ஆடம்பர ஷாப்பிங், அல்ட்ராமாடர்ன் கட்டிடக்கலை மற்றும் பொழுதுபோக்கிற்காக பெயர் பெற்ற துபாயைச் சுற்றிப்பார்க்க உலகம் முழுவதிலிருந்தும் ஆண்டுதோறும் ஏராளமான பார்வையாளர்கள் ஆவலுடன் வருவதுண்டு. அவ்வாறு துபாயை சுற்றிப்பார்க்க வரும் சுற்றிலாப்பயணிகளை, இலவச சிம் கார்டுகள் முதல் ஷாப்பிங் ரீஃபண்ட் வரை பல்வேறு சலுகைகளை வழங்கி ஆச்சரியப்படுத்த துபாய் தவறியதில்லை.

எனவே, நீங்கள் முதல் முறையாக துபாயை சுற்றிப்பார்க்க வரக்கூடியவராக இருந்தால், எமிரேட்டின் பல்வேறு கலாச்சாரங்களை அனுபவிப்பது மட்டுமல்லாமல், பல்வேறு சலுகைகளையும் உங்களால் அனுபவிக்க முடியும். அவ்வாறு துபாய்க்கு சுற்றுலா வரும் நபர்களுக்காகவே பிரத்யேகமாக வழங்கப்படும் விஷயங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

இலவச சிம் கார்டு

இந்தியா உள்ளிட்ட மற்ற பிற நாடுகளில் இருந்து விசிட் அல்லது டூரிஸ்ட் விசாவில் துபாய் வரும் பார்வையாளர்கள் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் (DXB) வந்திறங்கியதும், இமிகிரேஷன் செயல்முறையை முடிக்கும்போது ​​ இலவச சிம் கார்டை கவுண்டரில் இருந்து பெறுவீர்கள்.

துபாயில் உள்ள டெலிகாம் ஆபரேட்டரான ‘Du’, 90 நாட்களுக்கு செல்லுபடியாகும்  ‘Tourist Du SIM’ கார்டை இலவசமாக வழங்குகிறது. இலவச சிம் கார்டு 24 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் 1ஜிபி இலவச மொபைல் டேட்டாவுடன் வருகிறது, குறிப்பாக நீங்கள் தனியாக பயணம் செய்தால், நகரத்தை எளிதாக உலா வர இது பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.

செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!

Subscribe

இது தவிர, எடிசலாட் மற்றும் விர்ஜின் மொபைல் போன்ற ஆபரேட்டர்களும் சுற்றுலாப் பயணிகளின் தேவைகளுக்கு ஏற்ப சிம் கார்டுகளை வழங்குகின்றன. எடிசலாட்  28-நாள் அல்லது 10-நாள் விருப்பத்தை வழங்குகிறது, அதேநேரத்தில் விர்ஜின் மொபைல் ஏழு அல்லது 15-நாள் விருப்பத்தை வழங்குகிறது. நீங்கள் தங்கியிருக்கும் காலத்திற்கு ஏற்ப உங்களுக்கு என்ன தேவை என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம்.

சுற்றுலா தள்ளுபடி அட்டை

நீங்கள் துபாய் விமான நிலையத்தில் இமிகிரேஷனை கடக்கும்போது உங்களுக்கான இலவச சிம் கார்டைப் பெற்றுக் கொண்டது போலவே, உங்கள் இலவச தள்ளுபடி அட்டையையும் அங்கேயே பெறலாம். அங்குள்ள பார்கோடை ஸ்கேன் செய்வதன் மூலம் அல்சாடா டூரிஸ்ட் கார்டை (ALSAADA Tourist Card) உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்யலாம்.

நீங்கள் செயலியை இன்ஸ்டால் செய்ததும், துபாயில் வந்த தேதி மற்றும் பாஸ்போர்ட் எண் போன்ற தொடர்புடைய தகவலை உள்ளிடவும். ஆப் உங்கள் பெயரில் தள்ளுபடி அட்டையை உருவாக்கும். இந்த தள்ளுபடி அட்டை மூலம், கார் வாடகை, பணப் பரிமாற்றம் மற்றும் வங்கி ப்ரோமோஷன்கள் மற்றும் உடல்நலம் மற்றும் அழகு தொடர்பான தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் சிறப்புச் சலுகைகளைப் பெறலாம்.

வரி இல்லாத கொள்முதல் (tax free purchase)

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சுற்றுலாப் பயணிகள் குறைந்தபட்சம் 250 திர்ஹம் செலவழித்தால் வரியில்லா கொள்முதலுக்குத் தகுதியுடையவர்கள் ஆவார்கள். அதன்படி நீங்கள் கடையில், ஏதேனும்  ​​வாங்கும் போது  Planet Tax Free படிவத்தைக் கேட்கவும். பணம் செலுத்தும் முன், உங்கள் பாஸ்போர்ட்டை பேமெண்ட் சிஸ்டத்தில் பயன்படுத்த ஸ்கேன் செய்ய சமர்ப்பிக்கவும். அதன் பிறகு விற்பனை ரசீதின் பின்புறத்தில் கடை உதவியாளர் ‘Tax Free’ என்ற டேக்கை இணைப்பார்.

அதனைத் தொடர்ந்து நீங்கள் பொருளை வாங்கிய தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் விமான நிலையத்தில் உங்கள் பரிவர்த்தனையைச் சரிபார்க்க வேண்டும். இருப்பினும், சரிபார்ப்பு செயல்முறையை முடித்த ஆறு மணி நேரத்திற்குள் நீங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், இல்லையெனில் உங்கள் பரிவர்த்தனை ரத்து செய்யப்படும்.

VAT ரீஃபண்ட்:

நீங்கள் துபாயில் உள்ள ஒரு Planet-partner ஸ்டோரில் ஷாப்பிங் செய்ததும், ​நீங்கள் வாங்கிய பொருட்களுக்கு நீங்கள் செலுத்திய VAT வரியை ரீஃபண்ட் செய்யுமாறு  கோரலாம். விமான நிலையத்தில் உங்கள் வரி இன்வாய்ஸ்களைச் (Tax invoice) சமர்ப்பிப்பதன் மூலம் நகை உட்பட நீங்கள் வாங்கிய பொருட்களை சரிபார்க்கலாம்.

உங்களின் வரிப் பணத்தை அமீரக திர்ஹம்களில் பணமாகவோ அல்லது உங்கள் கிரெடிட் கார்டில் திருப்பிச் செலுத்தவோ உங்கள் பாஸ்போர்ட் மற்றும் கிரெடிட் கார்டின் நகலை சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல், நாட்டை விட்டு வெளியேறும் போது உங்களிடம் இல்லாத பொருட்களுக்கான வரிப்பணத்தைத் திரும்பப் பெற நீங்கள் கோர முடியாது.

இலவச பார்க்கிங், டாக்ஸி கட்டணத்தில் தள்ளுபடி

மாற்றுத் திறனாளிகள் அல்லது சிறப்பு உதவி தேவைப்படும் சுற்றுலாப் பயணிகள் துபாய் முழுவதும் மூன்று மாதங்கள் வரை இலவச பொது பார்க்கிங் வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் RTAவின் இணையதளம் அல்லது ஆப்ஸ் அல்லது RTA வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையத்தில் நேரில் சென்று இந்த சேவைக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும், மாற்றுத் திறனாளி குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்காக அதிகாரிகளால் வழங்கப்படும் சனத் கார்டுக்கான (Sanad card) ஸ்மார்ட் கார்டுக்கு நீங்கள் விண்ணப்பிக்கும் போது, ​​உங்கள் டாக்ஸி கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடியையும் அனுபவிக்கலாம். சமூக மேம்பாட்டு ஆணையத்தின் (CDA) அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது CDA வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையம் மூலம் நீங்கள் இந்த அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!