அமீரக செய்திகள்

துபாயில் அதிகரிக்கும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு.. அரசு நிறுவனங்களில் 22 தலைமை AI அதிகாரிகள் இன்று முதல் பணியமர்த்தல்..!!

உலகமே ஆர்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ் (Artificial intelligence-AI) என்று சொல்லக்கூடிய செயற்கை நுண்ணறிவை நோக்கி தொழில்நுட்பத்தை நகர்த்தியுள்ளது. அனைத்து துறைகளிலும் தற்பொழுது AI தொழில்நுட்பம் தனது தடத்தை பதித்துள்ள நிலையில் விரைவில் பல்வேறு துறைகளிலும் உலகமெங்கும் AI கோலூச்சி நிற்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானது ஒருபுறம் மக்களிடையே வேலைவாய்ப்பின்மையை அதிகம் ஏற்படுத்துவதற்கான வாய்ப்பாக இருந்த போதிலும் இதன் விரைவான, நுட்பமான செயல்பாடுகளினாலும் உலகம் முன்னோக்கி செல்லும்போது அதனை பின்பற்றும் விதமாகவும் பல நாடுகளிலும் சமீபத்திய வருடங்களில் AI பயன்பாடு அதிகரித்து வருகின்றது.

அதன் வரிசையில் தற்பொழுது அமீரகத்திலும் AI தொழில்நுட்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் துபாயில் உள்ள பல்வேறு அரசு நிறுவனங்களில் 22 தலைமை செயற்கை நுண்ணறிவு அதிகாரிகள் (Chief Artificial Intelligence Officers) இன்று (ஜூன்11, செவ்வாய்க்கிழமை) பதவியேற்று உள்ளனர். இந்த நடவடிக்கையானது அரசாங்க வேலைகளில் AI ஐப் பயன்படுத்துவதற்கான பார்வையின் ஒரு பகுதியாகும் என கூறப்பட்டுள்ளது.

துபாயில் உள்ள மியூசியம் ஆஃப் தி ஃப்யூச்சரில் செவ்வாயன்று நடைபெற்ற AI தொடர்பான நிகழ்வில், செயற்கை நுண்ணறிவு (AI), டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் ரிமோட் ஒர்க் அப்ளிகேஷன்களுக்கான மாநில அமைச்சர் உமர் சுல்தான் அல் ஒலாமா இதை வெளிப்படுத்தினார். செயற்கை நுண்ணறிவுக்கான துபாய் யுனிவர்சல் புளூபிரிண்டைத் தொடங்கியபோது, ​​துபாய் அரசாங்கம் முழுவதும் AI அதிகாரிகளைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கையை கடந்த ஏப்ரல் மாதம் ஷேக் ஹம்தான் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அல் ஒலமா பேசும்போது, “துபாய் ஏற்கனவே 22 தலைமை AI அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்துள்ளது, அவர்கள் இன்று தங்கள் கடமைகளை ஏற்றுக்கொள்வார்கள். ஒவ்வொரு தனிநபரும் அறிவு, இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான திறன்கள் மற்றும் அவர்களின் பணி என்ன என்பதைப் புரிந்துகொள்வதற்கான கடுமையான பயிற்சியை மேற்கொண்டனர். ஏனென்றால், ஒவ்வொரு அரசாங்கத் துறையிலும் உள்ள ஒவ்வொரு ஆலோசகரும் விழிப்புணர்வோடு, திறமையானவர் மற்றும் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கக் கூடியவர் என்பதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தத் துறையில் துபாயின் முன்னேற்றம் மற்றும் நிபுணத்துவம் மேம்படும் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் கட்டமைக்கப்பட்ட புதுமையான தீர்வுகளை உருவாக்குவதில் முன்னணியில் இருக்கும் அதன் நிலையை உறுதிப்படுத்தும் இந்த முயற்சியை ஒலாமா வலியுறுத்தியுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!