அமீரக செய்திகள்

இரவு நேரங்களில் பார்ப்பதற்கு ‘உலகின் மிக அழகிய நகரம்’ என்ற பட்டத்தை வென்ற துபாய்..!!

உலகளவில் Travelbag என்கிற ஹாலிடே நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், இரவு நேரங்களில் சுற்றிப்பார்ப்பதற்கு உலகின் மிக அழகிய, கவர்ச்சிகர நகரமாக துபாய் முதலிடத்தைப் பிடித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட தூர பயண அனுபவங்களை உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்ற இந்த நிறுவனம், உலகளவில் 136 நகரங்களில் ஒளி மற்றும் ஒலி மாசு அளவுகள், இன்ஸ்டாகிராம் ஹேஷ்டேக்குகள் மற்றும் இரவில் தனியாக நடப்பதற்கான பாதுகாப்பு மதிப்பீடுகள் உள்ளிட்ட காரணிகளை பகுப்பாய்வு செய்து முடிவுகளை வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வு முடிவுகளின் படி, துபாய் அதன் அற்புதமான இரவு நேர காட்சிகளுக்காக நீண்ட தூர பயணத்திற்கான வரிசையில் முன்னணியில் உள்ளது. இன்ஸ்டாகிராமில் மட்டும் ‘#dubaiatnight’ என்ற ஹேஷ்டேக்கில் சுமார் 27,387 டேக்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், துபாயில் உள்ள உயரமான வானளாவிய கட்டிடங்கள் மற்றும் மாறும் நகரக் காட்சிகளுடன் விளக்குகளின் பிரதிபலிப்புகள் இரவில் அழகை மேம்படுத்தும் ஒரு மாயாஜாலத்தை உருவாக்குவதாகவும், இரவு நேரக் காட்சி மெய்சிலிர்க்க வைப்பதாகவும்  துபாய்க்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கூறுகின்றனர். அதுமட்டுமில்லாமல், 100க்கு 83.4 என்ற பாதுகாப்பு மதிப்பெண்களுடன் உலகளவில் நான்காவது இடத்தைப் பிடித்து, பாதுகாப்பிலும் துபாய் சிறந்து விளங்குகிறது.

Photo: Kevin Kelly/Instagram

துபாயின் வலுவான பாதுகாப்பு மதிப்பீட்டிற்கு பல காரணிகள் பங்களிக்கின்றன. நகரம் நன்கு வளர்ந்த உள்கட்டமைப்பைப் பராமரிக்கிறது. அத்துடன் இதில் நன்கு வெளிச்சம் உள்ள தெருக்கள் மற்றும் பொதுப் பகுதிகள், விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகளால் கண்காணிக்கப்படுவது அடங்கும். குறிப்பாக, சட்ட அமலாக்க மற்றும் அவசர சேவைகள் உடனடியாக அணுகக்கூடியவை மற்றும் பதிலளிக்கக்கூடியவையாக இருக்கிறது, தேவைப்பட்டால் விரைவான உதவியை உறுதி செய்யும் வகையிலும் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Photo: Kevin Kelly/Instagram

இவை தவிர, துபாயின் கடுமையான விதிமுறைகள் மற்றும் சட்டங்களின் அமலாக்கம் ஆகியவை குறைந்த குற்ற விகிதத்திற்கு பங்களிக்கின்றன, இது பார்வையாளர்களிடையே ஒட்டுமொத்த பாதுகாப்பு உணர்வை மேம்படுத்துகிறது. இதனாலே பல குடியிருப்பாளர்களும் சுற்றுலாப் பயணிகளும் துபாயில் இரவு பயணத்தை அதிகம் விரும்புவதாக கூறப்படுகின்றது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!