துபாயில் ஃப்ரீ ஸோனாக அறிவிக்கப்பட்ட ‘One Za’abeel’ கட்டிடம்.. நிறுவனங்களுக்கான சலுகைகள் என்ன..??

வானளாவிய கட்டிடங்களுக்கு பெயர் போன துபாயில் உலகின் மிக நீளமான கான்டிலீவர் கட்டிடம் (cantilever building) என்ற கின்னஸ் சாதனை பட்டத்துடன் உலகளவில் புகழைப் பெற்றுள்ளது துபாயின் ஷேக் சயீத் சாலையில் உள்ள ‘ஒன் ஜபீல்’ (One Za’abeel) கட்டிடம். துபாயின் வேர்ல்டு டிரேடு சென்டருக்கு அருகில் அமைந்துள்ள இந்த கட்டிடமானது, இப்போது அதிகாரப்பூர்வமாக துபாய் உலக வர்த்தக இலவச மண்டலத்தின் (world trade free zone) ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பொருள், இந்த புதிய கட்டிடத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களும் இப்போது இலவச மண்டல (free zone) அதிகாரத்தால் வழங்கப்படும் சலுகைகளை அணுகலாம் என கூறப்பட்டுள்ளது. துபாயை பொறுத்தவரை மெயின் லேண்ட் (main land) மற்றும் ஃப்ரீ ஸோன் (free zone) என இரு பிரிவுகளாக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் ஃபிரீ ஸோன் நிறுவனங்களுக்கு ஒரு சில சலுகைகள் கொடுக்கப்பட்டிருக்கும்.
இந்த நிலையில் மெயின் லேண்டில் கட்டப்பட்டுள்ள ஒரு கட்டிடத்திற்கு ஃபிரீ ஸோன் அந்தஸ்து துபாயில் முதன் முறையாக கொடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் 2024 ஆம் ஆண்டின் ஆணை எண். 18 இல் குறிப்பிடப்பட்டுள்ளதன்படி இங்கு செயல்படும் அலுவலகங்கள் பெறும் நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவை:
- 100% வெளிநாட்டு உரிமை (100% foreign ownership)
- சுங்க வரிகளில் இருந்து விலக்கு (Exemption from customs duties)
- இரட்டை உரிம வாய்ப்புகள் (Dual-licensing opportunities)
- கார்ப்பரேட் வரி விசாக்கள் (0% Corporate Tax)
- விசா மற்றும் பெர்மிட்களுக்கான எளிமைப்படுத்தப்பட்ட நடைமுறைகள் (Simplified procedures for visas and permits)
- பரந்த அளவிலான நெகிழ்வான அலுவலக தீர்வுகள் (A wide range of flexible office solutions)
இது குறித்து தெரிவிக்கையில் “Free Zone இன் ஒரு பகுதியாக One Za’abeelஐச் சேர்ப்பதற்கான எங்கள் அதிகார வரம்பை விரிவுபடுத்துவது, துபாயின் வணிக மாவட்டத்தின் மையத்தில் வணிகம் மற்றும் நிறுவனத்திற்கான மையமாக எங்கள் நிலையை வலுப்படுத்துகிறது மற்றும் துபாயின் பொருளாதார இலக்குகளை விரைவுபடுத்துவதில் ஒருங்கிணைந்த வணிகங்கள் மற்றும் SME களுக்கு நேரடியாகப் பயனளிக்கிறது” என்று துபாய் உலக வர்த்தக மைய ஆணையத்தின் இலவச மண்டல ஒழுங்குமுறை நடவடிக்கைகளின் துணைத் தலைவர் அப்துல்லா அல் பன்னா கூறியுள்ளார்.
இந்த கட்டிடத்தைப் பொறுத்தவரை அலுவலகங்களானது 26,000sqm என்றளவில் கிரேடு-A அலுவலக இடம் மற்றும் பிரீமியம் வசதிகள் மற்றும் சேவைகளைக் கொண்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் LEED gold மற்றும் WiredScore platinum சான்றிதழ்கள் இரண்டையும் கொண்டுள்ளது என்றும், இது குத்தகைதாரர்களுக்கு தொழில்நுட்பம், இணைப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் மிக உயர்ந்த தரத்தை வழங்குகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel