அமீரக செய்திகள்

ஷார்ஜாவின் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் திடீரென ஏற்பட்ட தீவிபத்து..!! குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்..!!

ஷார்ஜாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திடீரென ஏற்பட்ட தீவிபத்து அங்கு வசிக்கும் மக்களுக்கு பதற்றத்தை அளித்துள்ளது. ஷார்ஜாவில் இருக்கக்கூடிய ஜமால் அப்துல் நசீர் ஸ்ட்ரீட்டில் உள்ள 13 மாடி கட்டிடத்தில் இன்று மதியம் தீ விபத்து ஏற்பட்டிருக்கின்றது.

தீவிபத்து குறித்து அறிந்ததும் தீயை கட்டுப்படுத்த பல சிவில் பாதுகாப்பு, ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் குழுக்கள் வந்ததால் கட்டிடத்தில் உள்ள அனைவரும் விரைவாக வெளியேற்றப்பட்டனர் என கூறப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1 மணி முதல் தீயை கட்டுப்படுத்த அதிகாரிகள் போராடியதாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் குடியிருப்பாளர்களின் கூற்றுப்படி, 13 மாடி கட்டிடத்தின் 11 வது மாடியில் தீ தொடங்கியதாக கூறப்பட்டுள்ளது.

இது குறித்து அக்கட்டிடத்தில் வசிக்கும் குடியிருப்பாளர் ஒருவர் கூறுகையில் “தீக்கான அலாரம் மணி அடிக்கத் தொடங்கியபோது, ​​கட்டிடத்தில் சத்தம் அதிகமாக இருந்தது. எங்கள் வீட்டின் கதவை யாரோ தட்டினார்கள். நான் வெளியே வந்ததும், ஒரு பெண், எங்களை ‘ஓடுங்கள்’ என்று கத்தினார். அப்போதுதான் எங்கள் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது என்பதை உணர்ந்தோம்” என்று கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில் “புகை வேகமாக பரவி அடுக்குமாடி குடியிருப்புகளை சூழ்ந்தது. இதனால் மக்கள் அனைவரும் பீதியடைந்து கத்திக்கொண்டே கட்டிடத்தை விட்டு வெளியேறினர்” என தெரிவித்துள்ளார். தீவிபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அதிகாரிகள் தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!