அமீரக சட்டங்கள்அமீரக செய்திகள்

UAE: ஓவர்ஸ்டேயில் தங்கியவர்கள் வேலை விசா பெற முடியாது, நாடு கடத்தப்படுவார்கள் என பரவிய செய்தி..!! GDRFA தெரிவித்தது என்ன..??

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுலா அல்லது விசிட் விசாவில் வரும் வெளிநாட்டவர்கள் விசா காலம் முடியும் முன்பாக நாடு திரும்பவில்லை என்றால் அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று வாட்ஸ்அப்பில் பரவி வரும் செய்தியை மறுப்பு தெரிவித்து துபாய் ரெசிடென்ஸ் மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFA) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அமீரகம் முழுவதும் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட “ஓவர்ஸ்டே அறிவிப்பு” எனும் தலைப்பிட்ட அந்த பதிவில், துபாயில் உடனடியாக நடைமுறைக்கு வரும் கடைசி கால அவகாச கொள்கை மாற்றத்தை துபாய் இமிகிரேஷன் அறிவித்துள்ளது. 5 நாட்களுக்கு மேல் தங்கியிருக்கும் பயணிகள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நிரந்தரமாக நாடு கடத்தப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்து. 

மேலும் அந்த பதிவில், அவர்களின் பெயர்கள் தடுப்புப்பட்டியலில் (blacklist) சேர்க்கப்படும், மேலும் அவர்கள் எந்த வேலை விசாவையும் செயலாக்குவதில் இருந்து விலக்கப்பட்டு வாழ்நாள் தடையுடன் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது. அத்துடன் கடைசி நேர சிக்கலை தவிர்க்க புதிய விதியைப் பற்றி வாடிக்கையாளர்களுக்கு அவசரமாக தெரிவிக்குமாறும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

GDRFA என்ற பெயருடன் அமீரக உள்துறை அமைச்சகத்தின் லோகோவுடன் பகிரப்பட்ட அந்த வாட்ஸ்அப் செய்தி குறித்து GDRFA கால் சென்டரிடம் தொடர்பு கொண்டு கேட்கப்பட்ட போது, அந்தப் பதவிகள் குறித்து தங்களுக்குத் தெரியும் என்றும், அவை GDRFA ஆல் வழங்கப்படவில்லை என்றும் கால் சென்டர் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

அதே போன்று, ​​GDRFA ஊடகத் துறையும் இந்த வதந்திகளை மறுத்து ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. அதில் துபாயில் உள்ள குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFA) குறித்த வதந்திகளைப் பின்பற்ற வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இருந்து மட்டும் தகவல்களைப் பெறுமாறும் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. 

அத்துடன், துபாய் எமிரேட் மூலம் குடியுரிமை வழங்கப்பட்டவர்கள் மற்றும் குறிப்பிட்ட ரெசிடன்ஸி பிரச்சனைகளை எதிர்கொள்பவர்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு தகுந்த தீர்வுகளை காண்பதற்காக அதன் அதிகாரப்பூர்வ சேனல்கள் மூலம் நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு GDRFA அழைப்பு விடுக்கிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!