அமீரக சட்டங்கள்அமீரக செய்திகள்

அமீரகத்தை விட்டு வெளியேறிய பிறகு ’End of service’ தொகையை எப்படி பெறுவது?? ‘Salary account’ஐ மூடாமல் சென்றால் பிரச்சினை ஏற்படுமா??

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நிறுவனத்தில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் அவரது சேவையின் இறுதிப் பலன்களை (End of Service benefit) பெறுவதற்கு முன்பாகவே நாட்டை விட்டு நிரந்தரமாக வெளியேறியிருந்தால் அதன் பிறகு சேவையின் இறுதி பலன்களை எவ்வாறு பெறுவது? அவ்வாறு வெளியேறியவர் சம்பளம் பெறும் அக்கவுண்டை க்ளோஸ் செய்யாமல் சென்றால் பிரச்சினை ஏற்படுமா? அமீரகத்திலிருந்து இத்தகைய சூழலை எதிர்கொள்ளும் ஊழியர்கள் என்ன செய்யலாம் என்பது பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலைவாய்ப்பு உறவுகளை ஒழுங்குபடுத்துதல் தொடர்பான 2021 ஆம் ஆண்டின் ஃபெடரல் ஆணைச் சட்டம் எண் 33 இன் பிரிவு 53இன் படி, முதலாளி ஊழியரின் கடைசி வேலை நாளிலிருந்து 14 நாட்களுக்குள் இறுதிச் சேவைப் பலன்களைச் செலுத்த வேண்டும். அமீ்ரகத்தில் வழங்கப்பட்ட தகவல் மற்றும் பொருந்தக்கூடிய விதிமுறைகளின் அடிப்படையில், உங்களின் ரெசிடென்ஸி விசாவை ரத்து செய்த பிறகு நாட்டை விட்டு வெளியேறுவது உங்கள் சம்பளம் பெறும் அக்கவுண்ட்டை முடக்கிவிடாது என்று தோன்றலாம். இருப்பினும், ஒருவர் அமீரகத்தை விட்டு வெளியேறிய பின், மீண்டும் அமீரகத்திற்கு திரும்பி வர விரும்பவில்லை என்றால், அந்த நபர் அமீரகத்தில் வைத்திருக்கும் வங்கிக் கணக்குகளை மூடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், வாடிக்கையாளர்கள் அக்கவுண்ட்டை க்ளோஸ் செய்யவும், வங்கியுடனான வணிக உறவை நிறுத்தவும் கோரும் பட்சத்தில், அக்கவுண்ட் திறக்கும் தேதி ஓராண்டுக்கு மேல் சென்றால் அபராதம் விதிக்காமல் வங்கி அதைச் செய்ய வேண்டும். மேலும் விண்ணப்பத்தை சமர்ப்பித்த நாளிலிருந்து அதிகபட்சம் ஏழு நாட்களுக்குள் (7) பொருத்தமான சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் எனவும் கூறப்படுகின்றது.

அமீரக மத்திய வங்கி சுற்றறிக்கை எண்.1/2020 இன் படி, அமீரகத்தில் ஒரு தனிநபரின் வங்கிக் கணக்கு மூன்று (3) ஆண்டுகளாக செயல்படவில்லை என்றால், அத்தகைய வங்கிக்கணக்கு ‘dormant account’ என்று பட்டியலிடப்படலாம் என கூறப்படுகின்றது.

செயலற்ற கணக்குகள் (dormant account) என்பதைத் தீர்மானிப்பதற்கான அளவுகோல்கள்:

  • கடைசியாக பரிவர்த்தனை செய்யப்பட்ட நாளிலிருந்து 3 வருட காலத்திற்கு பரிவர்த்தனைகள் அல்லது நிதி அல்லாத நடவடிக்கைகள் எதுவும் இல்லாத வங்கிக் கணக்கு.
  • வட்டி மற்றும் ஏதேனும் கட்டணங்கள் வங்கியால் அப்டேட் செய்யப்பட்டாலும், வாடிக்கையாளரிடமிருந்து எழுத்துப்பூர்வமாகவோ அல்லது டிஜிட்டலாகவோ எந்த தொடர்பும் இல்லாமல் இருத்தல்.

மேற்கூறிய சட்ட விதிகளின் படி, உங்களின் அமீரக வங்கிக் கணக்கிற்கு பிரச்சனை இல்லாமல் இருந்தால் விரைவில் உங்கள் இறுதிச் சேவைப் பலன்களை செலுத்துமாறு உங்கள் முதலாளியை கோரலாம். சேவையின் இறுதிப் பலன்கள் உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு, உங்களால் திரும்பப் பெறப்பட்டவுடன், நீங்கள் வங்கிக் கணக்கை மூடிவிட்டு, வங்கியிடமிருந்து வங்கிக் கணக்கு மூடல் கடிதத்தைப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!