ADVERTISEMENT

கோடை வெயிலுக்கு மத்தியில் அமீரகத்தில் பெய்த ஆலங்கட்டி மழை..!!

Published: 10 Jun 2024, 6:02 PM |
Updated: 10 Jun 2024, 6:04 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியிருப்பாளர்கள் கோடைக்காலத்தை எதிர்கொள்ள தயாராகி வரும் நிலையில், நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) ஒரு சில எமிரேட்களில் மழை பெய்துள்ளது. குறிப்பாக, ஷார்ஜாவின் உள் பகுதியான Mleihaவில் ஆலங்கட்டி மழை பெய்ததால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மகிழ்ச்சியடைந்ததாக கூறியுள்ளனர்.

ADVERTISEMENT

இது தொடர்பாக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்ட அறிவிப்பில், நேற்று பிற்பகல் ஃபுஜைராவின் மலைப்பகுதிகள், அல் அய்ன் மற்றும் ராஸ் அல் கைமா போன்ற பகுதிகளில் மிதமான மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் கிழக்குப் பகுதிகளில் மழை மேகங்கள் உருவானதால் மழை பெய்துள்ளது என்று கூறிய NCM, ராஸ் அல் கைமாவில் உள்ள கத்ரா மற்றும் ஷவ்காவில் லேசானது முதல் மிதமான மழை பதிவாகியதாகவும், பின்னர் பிற்பகல் 3.35 மணியளவில் பலத்த மழை பெய்ததாகவும் தெரிவித்துள்ளது.

அதே போல், இன்றும் அமீரகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. இதற்கிடையில், @storm_ae இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் நாடு முழுவதும் பதிவான மழை மற்றும் ஆலங்கட்டி மழையின் வீடியோக்களை பகிர்ந்துள்ளது.

ADVERTISEMENT

அத்துடன் NCM அதன் தினசரி வானிலை முன்னறிவிப்பில், இன்றைய தினம் நாட்டின் சில பகுதிகள் பலத்த காற்று மற்றும் தூசி புயல்களை சந்திக்கும் என்றும், தூசியுடன் கூடிய காற்று சாலைகளில் குறைந்த பார்வைத்திறனை ஏற்படுத்துவதால் வாகன ஓட்டிகளை எச்சரிக்கையாக இருக்குமாறும் NCM எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel