அமீரகத்தில் அரை சதம் அடிக்கும் வெயில்.. இன்று 50°C வரை வெப்பநிலை பதிவாகும் என வானிலை மையம் தகவல்..!!

அமீரகத்தில் தொடர்ந்து வெயிலின் கொடுமை அதிகரித்து வரும் நிலையில் தேசிய வானிலை ஆய்வு மையமானது (NCM) இன்றும் (ஜூன் 22, சனிக்கிழமை) அமீரகத்தில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என்று கூறியுள்ளது. ஏற்கெனவே நேற்று (வெள்ளிக்கிழமை) 3.15 மணியளவில் அமீரகத்தில் இந்த வருடத்தின் அதிகபட்ச வெப்பநிலையாக 49.9 °C என்ற அளவில் அல் தஃப்ரா பிராந்தியத்தின் மெஸைரா பகுதியில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்றும் அதேபோல் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன், ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (சனிக்கிழமை) ஓரளவு மேகமூட்டமான நாள் இருக்கும், பிற்பகலில் கிழக்குப் பகுதிகளில் அதிக மேகங்கள் தோன்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கடலோரப் பகுதிகளில் இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் ஈரப்பதத்துடன் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் இன்று, Gasyoura மற்றும் Al Quaவில் வெப்பநிலை 50ºC ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஈரப்பதம் குறியீடு Gasyoura இல் 45 சதவிகிதம் மற்றும் Al Quaவில் 40 சதவிகிதம் வரை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், அபுதாபி மற்றும் துபாயில் வெப்பநிலை முறையே 47ºC மற்றும் 46ºC வரை அடையும் என கூறப்பட்டுள்ளது.
அமீரகத்தில் நிலவும் இந்த கோடை வெப்பத்தை முன்னிட்டு நேரடியாக சூரியனுக்குக் கீழே வேலை செய்யும் ஊழியர்களுக்கு மதிய நேர வேலை தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 15 வரை இருக்கும் இந்த தடையானது ஒவ்வொரு வருடமும் கோடைகாலத்தில் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel