அமீரக செய்திகள்

UAE: தொழிலாளர் புகாரை எளிதில் அளிக்க புதிய வசதி.. வீடியோ கால் முறையை அறிமுகப்படுத்தியுள்ள அமைச்சகம்..

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிந்து வரும் நபர்கள் தங்களின் பணியில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதனை தீர்க்கவும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யவும் புகாரளிக்கும் வசதியானது பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த சேவையை எளிதாக்க பல புதிய வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமீரகத்தில் பணிபுரியும் நபர்கள் இப்போது தொழிலாளர் புகார்களை வீடியோ அழைப்பு மூலம் மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகத்தை (MoHRE) அணுகி புகாரளிக்கலாம் என்று தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.

Mohre இன் ஸ்மார்ட் அப்ளிகேஷனில் கிடைக்கும், ‘உடனடி வீடியோ அழைப்பு (instant video call)’ விருப்பம் ஊழியர்கள் மற்றும் முதலாளிகள் இருவரும் அமைச்சகத்தின் சேவைகளைப் பற்றி விசாரிக்கவும் தேவையான ஆதரவைப் பெறவும் அனுமதிக்கிறது என கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இது அமைச்சகத்தின் WhatsApp ஹாட்லைன் 600590000 மூலம் தொடர்ந்து கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கூறுகையில் “இந்த புதிய சேவையானது அனைத்து வாடிக்கையாளர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களுக்கு ஆதரவு, உதவி மற்றும் உடனடி பதில் ஆகியவற்றை வழங்குகிறது” என்று அமைச்சகத்தின் வாடிக்கையாளர் உறவுகள் துறையின் இயக்குனர் ஹுசைன் அல் அலிலி கூறியுள்ளார். மேலும் தொழிலாளர் சந்தை விதிமுறைகளுக்கு இணங்குவதை மேம்படுத்தும் அதே வேளையில் குடியிருப்பாளர்களின் கேள்விகளுக்கு நம்பகமான பதில்களை வழங்குவதே இதன் குறிக்கோள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சேவை எவ்வாறு செயல்படுகிறது?

Mohre இன் அதிகாரப்பூர்வ வேலை நேரத்தில் இந்த வீடியோ அழைப்பு சேவை கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

  • திங்கள் முதல் வியாழன் வரை: காலை 7.30 மணி முதல் மாலை 3 மணி வரை
  • வெள்ளிக்கிழமை காலை 7.30 முதல் மதியம் 12 மணி வரை

இருப்பினும், வாடிக்கையாளர்கள் அமைச்சகத்தின் அழைப்பு மையத்தை 600590000 என்ற எண்ணில் வாரம் முழுவதும் எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் புதிய வீடியோ அழைப்பு சேவையை அணுக, Mohre இன் ஸ்மார்ட் அப்ளிகேஷனை பதிவிறக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பின் திரையில், கீழே உள்ள ‘support’ என்பதை கிளிக் செய்து கடைசியாக ‘video call’ என பெயரிடப்பட்ட வாடிக்கையாளர் சேவை விருப்பங்களின் பட்டியலுக்கு அனுப்பப்பட்ட பின்னர் வீடியோ கால் மூலம் புகாரளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகமானது கடந்த 2023 இல் அதன் சேவை சேனல்கள் மூலம் 50 மில்லியனுக்கும் அதிகமான சந்தேகங்கள் மற்றும் உரையாடல்களை வாடிக்கையாளர்களுடன் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

 

Related Articles

Back to top button
error: Content is protected !!