அமீரக சட்டங்கள்அமீரக செய்திகள்

ரெசிடென்ஸி விசா, ஒர்க் பெர்மிட் நடைமுறைகளில் மாற்றத்தை கொண்டு வரும் அமீரக அரசு..!! இனி அதிக நாட்கள் காத்திருக்க தேவையில்லை..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒர்க் பெர்மிட் (work permit) எனும் பணி அனுமதி மற்றும் ரெசிடென்ஸி விசாக்களைப் பெறுவதற்கான பல்வேறு செயல்முறைகளையும் முடிக்க கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகும் நிலையில் இனி வெறும் 5 நாட்களிலேயே இந்த செயல்முறைகளை முடிக்கலாம் என அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதாவது இத்தகைய ரெசிடென்ஸி விசாக்கள் மற்றும் ஒர்க் பெர்மிட் ஆகியவற்றிற்கான தேவையான ஆவணங்களைச் செயலாக்குவதற்கான நேரம் 30 நாட்களில் இருந்து ஐந்து நாட்களாக அரசு குறைத்துள்ளது.

அதாவது அமீரகத்தில் இருக்கும் சுமார் 600,000 நிறுவனங்களையும் ஏழு மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்களையும் உள்ளடக்கிய வேலைத் தொகுப்பின் (Work Bundle) இரண்டாம் கட்டமானது இன்று அரசால் (செவ்வாய்க்கிழமை) தொடங்கப்பட்டுள்ளது.

வணிக உரிமையாளர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு புதிய ஊழியர்களை பணியமர்த்துவதை எளிதாக்கும் ஒரு தளத்தை தொடங்குவதற்கும், மேலும் ஏற்கனவே நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கான பணி அனுமதிகளை ப்ரீ-ரின்யூவல் (pre renewal) செய்வதற்கும் பல அரசாங்க அமைச்சகங்கள் மற்றும் கூட்டாட்சி அதிகாரிகள் ஒன்றிணைந்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, துபாயில் முதன்முதலில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கட்டம் வெளியிடப்பட்டது. இப்போது இரண்டாம் கட்டமாக ஏழு எமிரேட்களிலும் இந்த முறை செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, மூன்றாம் கட்டம் வீட்டுப் பணியாளர்களை உள்ளடக்கும் என்று MoHRE தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நிறுவனங்களும் ஊழியர்களும் இப்போது பணித் தொகுப்பை அதன் இணையதளத்தில் (workinuae.ae) மட்டுமே அணுக முடியும் என்றும், விரைவில் மொபைல் அக்ளிகேஷன் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

புதிய முறை எவ்வாறு நிறுவனங்களின் நேரத்தை மிச்சப்படுத்தும்?

வேலைத் தொகுப்பு அதிகாரத்துவ நடைமுறைகளைக் குறைப்பதற்கும் வணிகங்களுக்கான நேரத்தைச் சேமிப்பதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 • ஐந்து நாட்கள்: விசா மற்றும் பணி அனுமதி விண்ணப்பத்தை முடிக்க எடுக்கும் மொத்த நேரம் வெறும் 5 வேலை நாட்கள் ஆகும்.
 • ஐந்து ஆவணங்கள்: அத்தகைய செயல்முறைகளை முடிக்க தேவையான மொத்த ஆவணங்களின் எண்ணிக்கையும் 16ல் இருந்து ஐந்தாக குறைக்கப்பட்டுள்ளது
 • இரண்டு வருகைகள் மட்டுமே: புதிய மையப்படுத்தப்பட்ட தளத்துடன், ஊழியர்கள் இரண்டு வருகைகளை மட்டுமே செய்ய வேண்டும் – ஒன்று மருத்துவ பரிசோதனைக்காகவும் மற்றொன்று அவர்களின் எமிரேட்ஸ் ஐடி பயோமெட்ரிக் ஸ்கேன்க்காகவும் வருகை புரிவதாக இருக்கும்.

புதிய முறைகளில் கிடைக்கும் சேவைகள்

 • புதிய வேலை அனுமதி வழங்குதல்
 • நிலை சரிசெய்தலைக் கோருதல் (status adjustment)
 • விசா வழங்குதல் 
 • வேலை ஒப்பந்தத்தை வழங்குதல் 
 • எமிரேட்ஸ் ஐடி மற்றும் ரெசிடென்ஸியை வழங்குதல் 
 • மருத்துவ பரிசோதனை சேவைகள்
 • தொழிலாளியின் வேலை ஒப்பந்தத்தை புதுப்பித்தல் 
 • எமிரேட்ஸ் ஐடி மற்றும் ரெசிடென்ஸியை புதுப்பித்தல் 
 • வேலை அனுமதியை ரத்து செய்தல் 
 • ரெசிடென்ஸியை ரத்து செய்தல்

Photo: Angel Tesorero

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!