அமீரக சட்டங்கள்

அமீரக ரெசிடென்ஸி விசா கேன்சல் ஆகிவிட்டதா..?? நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிப்பது எப்படி..?? முழுவிபரங்களும்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் பெரும்பாலான வெளிநாட்டவர்கள் வணிக மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக அடிக்கடி சொந்த நாடுகளுக்கும் மற்ற நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்கிறார்கள். அவ்வாறு செல்லும்போது மற்ற நாடுகளில் ஆறு மாதங்களுக்கு மேல் தங்கக்கூடிய சூழ்நிலை சில சமயங்களில் உருவாகலாம். ஆனால் ஆறு மாதங்களுக்கு மேல் அமீரகத்தை விட்டு வெளியே தொடர்ந்து தங்கினால் அது அவர்களின் ரெசிடென்ஸி விசாவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

அதாவது ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர் ஆறு மாதங்கள் அல்லது 180 நாட்களுக்கு மேல் அமீரகத்திற்கு வெளியே தங்கியிருந்தால், அவருடைய ரெசிடென்ஸி விசா தானாகவே ரத்து செய்யப்படும். எனவே இவ்வாறு 6 மாதங்களுக்கு மேல் வெளிநாடுகளில் தங்கியிருந்து விட்டு மீண்டும் அமீரகத்திற்குள் நுழைய விரும்புபவர்கள் அதற்காக முறையான அனுமதி பெறுவது கட்டாயமாகும். இந்த அனுமதி பெற்ற பிறகே அந்த நபர்கள் மீண்டும் அமீரகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். இத்தகைய சூழ்நிலையை நீங்கள் எதிர்கொண்டால் மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நுழைவதற்கான புதிய நுழைவு அனுமதிக்கு நீங்கள் எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்பது பற்றி கீழே காணலாம்.

ICP ஸ்மார்ட் சேவைகள்

ஆறு மாதங்களுக்கும் மேலாக நாட்டிற்கு வெளியே தங்கியிருக்கும் ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் பின்வரும் வழிகளில் புதிய நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்:

 • அடையாளம், குடியுரிமை, சுங்கம் & துறைமுக பாதுகாப்பிற்கான (ICP) ஃபெடரல் அத்தாரிட்டியின் இணையதளத்தை பார்வையிடவும்.
 • ICP முகப்புப் பக்கத்தில் நீங்கள் வந்ததும், ‘Residents outside the UAE’ என்பதைக் கிளிக் செய்யவும்.
 • ‘Residency- All Residence Types- Permits for Staying Outside the UAE Over 6 Months – New Request’ என்பதை கிளிக் செய்து, பின்னர் ‘start service’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
 • உங்களின் அடையாள எண், தேசியம், பாஸ்போர்ட் தகவல் மற்றும் 6 மாதங்களுக்கும் மேலாக அமீரகத்திற்கு வெளியே தங்கியதற்கான காரணம் போன்ற உங்களின் தகவல்களை நிரப்பவும்.
 • ‘next’ என்பதைக் கிளிக் செய்யவும்
 • பாஸ்போர்ட் நகல் மற்றும் எமிரேட்ஸ் ஐடி நகல் போன்ற தேவையான ஆவணங்களை இணைக்கவும்.
 • விண்ணப்பத்தை மதிப்பாய்வு செய்யவும்.
 • விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்.

டைப்பிங் சென்டர்

ICP ஆல் அங்கீகாரம் பெற்ற டைப்பிங் சென்டருக்கு சென்று பின்வருவனவற்றைச் செய்வதன் மூலம் புதிய நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்:

 • விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.
 • விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
 • பாஸ்போர்ட் நகல் மற்றும் எமிரேட்ஸ் ஐடி நகல் போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்கவும்.
 • சேவை கட்டணம் செலுத்தவும்.

GDRFA இணையதளம்

நீங்கள் ஆறு மாதங்களுக்கும் மேலாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெளியே தங்கியிருக்கும் துபாயில் வசிப்பவராக இருந்தால், நீங்கள் சொந்தமாக புதிய நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியாது. உங்கள் நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்க உங்கள் ஸ்பான்சரிடம் நீங்கள் கேட்க வேண்டும். உங்கள் ஸ்பான்சர் பின்வரும் வழிகளில் விண்ணப்பிக்க வேண்டும்:

 • உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி ரெசிடென்ஸ் மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDFRA) இணையதளத்தில் பதிவு செய்யவும்
 • username மூலம் login செய்து உள்நுழையவும்.
 • ‘Services’ என்பதைக் கிளிக் செய்யவும்.
 • Issuance of a Residency Visa’ என்பதைக் கிளிக் செய்யவும்.
 • ‘Visa Issuance for Foreigners linked with Job Contract’ என்பதைக் கிளிக் செய்யவும்.

வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையம் மூலமாகவும் உங்கள் ஸ்பான்சர் புதிய நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்:

 • வரிசை முறையைப் பயன்படுத்தி டிக்கெட்டைப் பெற வேண்டும்
 • அனைத்து நிபந்தனைகளையும் ஆவணங்களையும் பூர்த்தி செய்யும் விண்ணப்பத்தை வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியிடம் சமர்ப்பிக்கவும்.
 • சேவைக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் (தேவைப்பட்டால்)

தேவைகள்

 • விண்ணப்பம் வெளிநாட்டிலிருந்து சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
 • அமீரகத்திற்கு வெளியே 180 நாட்கள் தங்கிய பிறகு இந்தக் கோரிக்கைக்கு விண்ணப்பிக்கலாம்.
 • 180 நாட்களுக்கு மேல் நாட்டிற்கு வெளியே இருப்பதை நியாயப்படுத்த சரியான காரணத்தை நீங்கள் வழங்க வேண்டும்.
 • நீங்கள் அமீரகத்திற்கு வெளியே கழித்த ஒவ்வொரு 30 நாட்களுக்கும் 100 திர்ஹம்ஸ் அல்லது அதற்கும் குறைவாக அபராதம் விதிக்கப்படும். இருப்பினும், நீங்கள் 180 நாட்களுக்கும் மேலாக நாட்டிற்கு வெளியே தங்கியிருக்கும் துபாயில் வசிப்பவராக இருந்தால், உங்களின் 180 நாள் சலுகைக் காலம் முடிந்த பின்னரே நீங்கள் அபராதம் செலுத்தத் தொடங்க வேண்டியிருக்கும்.
 • விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தவுடன் உங்கள் ரெசிடென்ஸி விசாவின் மீதமுள்ள காலம் 30 நாட்களுக்கு மேல் இருக்க வேண்டும்.
 • நீங்கள் ஒரு நிறுவனத்தால் ஸ்பான்சர் செய்யப்பட்டிருந்தால், உங்கள் விண்ணப்பத்தை நீங்கள் அல்லது உங்கள் நிறுவனம் சமர்ப்பிக்கலாம்.
 • உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் மட்டுமே அபராதக் கட்டணம் திரும்பப் பெறப்படும்.
 • உங்கள் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதும், ஒப்புதல் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் நீங்கள் நாட்டிற்குள் நுழைய வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்

புதிய அனுமதி நுழைவு விண்ணப்பத்திற்கான கட்டணம் 200 திர்ஹம்ஸ் மற்றும் Amer போன்ற வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள் மூலம் நுழைவு அனுமதிக்கு விண்ணப்பித்திருந்தால் 420 திர்ஹம்ஸ் வரை கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். உங்கள் சூழ்நிலையைப் பொறுத்து மொத்த கட்டணத் தொகை மாறுபடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அபராத விலக்கு பெற்றவர்கள்

நீங்கள் ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெளியே 180 நாட்களைத் தாண்டி தங்கியிருந்தாலும், உங்கள் ரெசிடென்ஸி நிலை இன்னும் ‘active’ என இருப்பதாகக் காட்டப்பட்டு, குறைந்தபட்சம் 30 நாட்கள் செல்லுபடியாகும் எனில், அபராதம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவீர்கள்.

நுழைவு அனுமதி பெறுவதற்கான செயல்முறையை முடித்தவுடன், புதிய நுழைவு அனுமதிக்கான உங்கள் கோரிக்கையின் முடிவை 48 மணிநேரம் அல்லது அதற்கும் குறைவாக எதிர்பார்க்கலாம்.

ரெசிடென்ஸி நிலையை சரிபார்க்கும் முறை

ICP இணையதளத்திற்குச் சென்று பின்வருவனவற்றைச் செய்வதன் மூலம் உங்கள் ரெசிடென்ஸி நிலையை நீங்கள் சரிபார்க்கலாம்:

 • ‘File Validity’ என்பதை கிளிக் செய்யவும்.
 • ‘By Search’ என்பதை கிளிக் செய்து, ‘File no’ அல்லது ‘Passport Information’ ஐ மேர்வு செய்யவும்.
 • ‘Select the type’ என்பதைக் கிளிக் செய்து, ‘Residency’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
 • ‘File type’ என்பதை அழுத்தி, ‘Emirates ID number’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
 • உங்கள் எமிரேட்ஸ் ஐடி எண், தேசியம் மற்றும் பிறந்த தேதியை நிரப்பவும். ‘search’ என்பதைக் கிளிக் செய்யவும்.

பின்வருவனவற்றைச் செய்வதன் மூலம் உங்கள் ரெசிடென்ஸ் நிலையை நீங்கள் சரிபார்க்கலாம்:

 • “UAEICP” மொபைல் பயன்பாட்டைப் பதிவிறக்கவும். உங்களிடம் இன்னும் அக்கவுண்ட் இல்லையென்றால், உங்களின் ஈமெயிலை பயன்படுத்தி பதிவு செய்யவும்.
 • UAEPASS மூலம் உள்நுழையவும்.
 • நீங்கள் அப்ளிகேஷனிற்கு வந்ததும், அப்ளிகேஷனின் முதன்மைப் பக்கத்திலிருந்து “sponsored” விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். அதில் உங்கள் விசா இன்னும் செயலில் உள்ளதா இல்லையா என்பதைப் பார்க்கலாம்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!