அமீரக சட்டங்கள்அமீரக செய்திகள்

துபாயில் நர்ஸ் வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி? வெளிநாட்டவர்களுக்குத் தேவையான தகுதிகள், செயல்முறை என்ன..??

துபாயில் நர்சிங் துறையில் பணியாற்ற விரும்புகிறீர்களா? வெளிநாட்டவர்கள் துபாயில் நர்ஸாக பணிபுரிவதற்கு தேவையான கல்வித் தகுதிகள் மற்றும் உரிமத் தேவைகள் பற்றிய கூடுதல் விபரங்கள் தெரியவில்லையா? உங்களுக்குத் தேவையான முழு விபரங்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் Covid-19 தொற்றுநோய்க்குப் பிறகு, செவிலியர்கள் போன்ற முன்களப் பணியாளர்களுக்கு கோல்டன் விசாவிற்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை வழங்க அதன் சட்டங்களை திருத்தியது. இது அவர்களை 10 ஆண்டுகள் வரை நாட்டில் வசிக்க அனுமதிக்கிறது. மேலும், சுகாதாரம் மற்றும் தடுப்பு அமைச்சகம் சில செவிலியர்களுக்கான இரண்டு வருட பணி அனுபவத்தை நீக்குவதற்கான ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருக்கின்றது. இது முன்னர் லைசென்ஸ் பெறுவதற்குத் தேவைப்பட்டது. இதனை அபுதாபியில் உள்ள சுகாதாரத் துறை, துபாய் சுகாதார ஆணையம் மற்றும் ஷார்ஜா சுகாதார ஆணையம் ஏற்றுக் கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதனடிப்படையில் நர்ஸாக பணிபுரிவதற்குண்டான தகுதிகள் குறித்த விபரங்களை கீழே காணலாம்.

கல்வி தேவைகள்

துபாய் சுகாதார ஆணையத்தின்படி, வெவ்வேறு பிரிவினருக்கான செவிலியர்கள் வெவ்வேறு கல்வித் தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்.

பதிவுசெய்யப்பட்ட செவிலியர் (Registered nurse): நீங்கள் துபாயில் பதிவுசெய்யப்பட்ட நர்ஸாக வேலை செய்ய வேண்டுமெனில், குறைந்தபட்சம் மூன்று வருட கால முழுநேர படிப்பில் நர்சிங் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மாறாக, நர்சிங்கில் இரண்டு வருட பட்டம் பெற்றவர்கள் கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, அயர்லாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அல்லது ஆஸ்திரேலியாவில் இருந்து செவிலியராகப் பதிவு செய்திருக்க வேண்டும்.

அசிஸ்டன்ட் நர்ஸ்: அசிஸ்டன்ட் நர்ஸ் வேலைக்கு விண்ணப்பிக்க உங்களிடம் 18 மாதங்களுக்கு குறையாத நர்சிங் டிப்ளமோ முடித்த சான்றிதழ் இருக்க வேண்டும்.

ஸ்கூல் நர்ஸ்: இந்த வேலைக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் பதிவுசெய்யப்பட்ட நர்ஸாக (registered nurse) தகுதி பெற்றிருக்க வேண்டும் மற்றும் செல்லுபடியாகும் குழந்தை மருத்துவ மேம்பட்ட வாழ்க்கை ஆதரவு (Pediatric Advanced Life Support- PALS) உடன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

செவிலியர் பயிற்சியாளர் (Nurse practitioner): செவிலியர் பயிற்சியாளர்கள், கிளினிக்கல் மாஸ்டர்ஸ் அல்லது நர்சிங்கில் டாக்டர் பட்டம் (doctoral degree) பெற்றிருப்பதோடு, பதிவுசெய்யப்பட்ட செவிலியரின் (registered nurse) தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

உங்களிடம் கிளினிக்கல் மாஸ்டர்ஸ் அல்லது நர்சிங்கில் டாக்டர் பட்டம் இல்லையென்றால், மருந்துகளை பரிந்துரைப்பதற்கான மருந்தியலில் (pharmacology) சமமான தகுதியை வழங்கலாம் அல்லது வேறுபட்ட நோயறிதல், வரிசைப்படுத்துதல் மற்றும் கண்டறியும் சோதனைகளின் விளக்கம் (கதிரியக்க மற்றும் நோயியல் சோதனைகள்) அல்லது ‘மேம்பட்ட சுகாதார மதிப்பீட்டின் (Advanced Health Assessment)’ சான்று காட்டும் தகுதியும் கூட வழங்கலாம். அத்துடன் ஒரு செவிலியர் பயிற்சியாளராக தேசிய சான்றிதழ் அல்லது உரிமம் பெற்றவர்கள், ஒரு செவிலியர் பயிற்சியாளராக பணிபுரிய வேண்டுமென்றால் பதிவுசெய்யப்பட்ட நர்ஸின் தேவைகளைப் பூர்த்தி செய்திருப்பது அவசியம்.

ஸ்பெஷாலிட்டி நர்ஸ்: நர்சிங் ஸ்பெஷலிட்டிகளில் ஒன்றில் ஒரு வருடத்திற்கான கிளினிக்கல் மாஸ்டர்ஸ் பட்டம் பெற்ற சிறப்பு செவிலியர்கள், அத்துறையில் குறைந்தபட்சம் ஒரு வருட கால அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அதேபோல், நர்சிங் சிறப்புப் பிரிவில் மூன்று ஆண்டு கால படிப்புடன் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் அத்துறையில் குறைந்தது இரண்டு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பிற தேவைகள்

துபாயில் நர்சிங் பணிக்கு விண்ணப்பிக்கும் போது, முக்கிய கல்வி மற்றும் அனுபவ அடிப்படையிலான தேவைகள் தவிர, பூர்த்தி செய்ய வேண்டிய முக்கியமான சில கூடுதல் தேவைகள் உள்ளன.

  • வெளிநாட்டு விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த நாட்டில் அல்லது உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அல்லது சர்வதேச கல்லூரிகளில் பட்டதாரிகளாக இருக்க வேண்டும்.
  • அமீரகத்தில் பட்டம் பெற்றவர்கள், கல்வி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது படிப்பில் படித்திருக்க வேண்டும்.
  • UAE பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற வெளிநாட்டவர்கள், APS சுகாதார நிலையத்தில் பட்டப்படிப்புக்குப் பிறகு ஆறு மாத கிளினிக்கல் பயிற்சியை முடிக்க வேண்டும். பதிவுசெய்த மற்றும் உதவி செவிலியர்களுக்கு இது பொருந்தாது.
  • GCC நாடுகளைச் சேர்ந்த நாட்டவர்கள், APS சுகாதார நிலையத்தில் பட்டம் பெற்ற பிறகு ஆறு மாத கிளினிக்கல் பயிற்சியை முடிக்க வேண்டும். பதிவுசெய்த மற்றும் உதவி செவிலியர்களுக்கு இது பொருந்தாது.

விண்ணப்ப செயல்முறை:

உங்களிடம் தேவையான அனைத்து ஆவணங்கள் மற்றும் தகுதிகள் தயாராக இருப்பதை உறுதிசெய்த பிறகு, துபாயில் பயிற்சி செய்வதற்கான உரிமத்தைப் பெற DHA க்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பதிவு செயல்முறைக்கு விண்ணப்பதாரர்கள் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு படம், பாஸ்போர்ட் நகல் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணத்துவத்திற்கான (surgical specialities) பதிவு புத்தகம் ஆகியவற்றைக் காட்ட வேண்டும். விண்ணப்பதாரர்கள் DHA இன் இணையதளத்தில் உள்ள ஷெரியன் போர்ட்டலில் (Sheryan portal) பின்வரும் வழிமுறைகளை பின்பற்றலாம்.

  • சுகாதார நிபுணர் சுய மதிப்பீட்டு கருவி (Self Assessment Tool) சேவையை முடிக்க வேண்டும். இதற்கு ஆவணங்கள் தேவையில்லை மற்றும் இலவசமாக செய்யலாம். யுனிஃபைட் ஹெல்த்கேர் ப்ரொபஷனல் தேவைகள் (PQR) நிர்ணயித்த தரநிலைகளை விண்ணப்பதாரர் பூர்ர்த்தி செய்திருக்கிறாரா என்பதற்கான ஆன்லைன் சோதனை இது. முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெறவில்லை என்றால், ‘not eligible’ என்ற முடிவைப் பெறுவார்கள்.
  • சேவை முன்நிபந்தனைகளை முடிக்கவும்.
  • இந்த சேவைக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
  • நர்ஸ் மற்றும் மிட் வைஃப்கள் (midwife) 200 திர்ஹம் கட்டணம் செலுத்த வேண்டும்
  • DHA உங்கள் விண்ணப்பத்தை மதிப்பாய்வு செய்து முடிவை வழங்கும்
  • தொழில்முறை நிலையின் அடிப்படையில், அதிகாரத்திற்கு வாய்வழி மதிப்பீடு (oral assessment) தேவைப்படலாம்
  • நீங்கள் தேர்ச்சி பெற்றவுடன், பதிவு செய்யப்படுவீர்கள் மற்றும் துபாய் மருத்துவப் பதிவேட்டின் (Dubai Medical Registry) ஒரு பகுதியாக மாறுவீர்கள்.

அவ்வாறு பதிவுசெய்த பிறகு, உங்கள் உரிமத்தை செயல்படுத்துவது உங்களை பணியமர்த்தும் மருத்துவ நிறுவனத்தின் பொறுப்பாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!