அமீரக சட்டங்கள்அமீரக செய்திகள்

அமீரகத்தில் டூரிஸ்ட் கைடிற்கு 23,500 காலி பணியிடங்கள்..!! தகுதி, கட்டணம், செயல்முறை குறித்த முழுவிபரங்களும் உள்ளே..!!

உலகளவில் சுற்றுலா செல்வதற்கான சிறந்த நாடுகளில் ஒன்றாக ஐக்கிய அரபு அமீரகம் உருவெடுத்துள்ளது. அமீரகத்தில் நாளுக்கு நாள் சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கையும் எப்போதும் ஏறுமுகமாகவே இருக்கின்றது. எளிதாக விசா கிடைப்பது, நண்பர்கள் மற்றும் குடும்பங்களாக வருவதற்கு ஏற்றவாறு பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள், வானளாவிய கட்டிடங்கள் என பல்வேறு அம்சங்கள் இருப்பதால் மக்கள் பலரும் அமீரகத்திற்கு சுற்றுலா வர பெரிதும் விரும்புகின்றனர். இதனால் அமீரகம் சுற்றுலா துறையில் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கின்றது.

இவ்வாறு சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அமீரகத்தை சுற்றிக்காட்டும் டூரிஸ்ட் கைடு (tourist guide) என்று சொல்லக்கூடிய சுற்றுலா வழிகாட்டிக்கான நபர்களின் தேவையும் அதிகரித்து வருகின்றது. அதாவது நடப்பு ஆண்டான 2024 இல் டூரிஸ்ட் கைடுகளுக்காக 23,500 காலியிடங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது போன்று டூரிஸ்ட் கைடாக பணிபுரிய விரும்பும் நபர்கள் அதற்கான உரிமம் பெறவும், தொழில்முறை சுற்றுலா வழிகாட்டியாக ஆகவும் விரும்பும் நபர்களுக்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளன. இதற்கு தேவையான தகுதிகள் முதல் கட்டணம் வரை, ஐக்கிய அரபு அமீரகத்தின் வெவ்வேறு எமிரேட்டுகளில் சுற்றுலா வழிகாட்டியாக மாறுவதற்கான விபரங்களை இந்த பதிவில் காணலாம்.

துபாய்

துபாயில் சுற்றுலா வழிகாட்டிகளாக மாற விரும்புவோருக்கு, இதற்கான விண்ணப்பத்தை எளிதில் செயல்படுத்தும் வகையில், முற்றிலும் ஆன்லைனில் லைசென்ஸ் வழங்கும் திட்டத்தை அரசாங்கம் வழங்குகிறது. இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இது ஆங்கிலம் மற்றும் மாண்டாரின் (Mandarin) என்று சொல்லக்கூடிய சீன மொழியில் கிடைக்கின்றது.

தேவையான ஆவணங்கள்:

  • ஸ்பான்சரிடமிருந்து ஆட்சேபனை இல்லா கடிதம் (NOC)
  • துபாய் காவல்துறையின் காவல்துறை அனுமதி சான்றிதழ் (police clearance certificate)
  • சான்றளிக்கப்பட்ட கல்விச் சான்றிதழ் (attested educational certificate) தேவை. குறைந்தபட்ச நிலையாக விண்ணப்பதாரர் உயர்நிலைப் பள்ளி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • ஆங்கில புலமை சான்றிதழ் (English proficiency certificate) நிலை 5 (level 5), மேல் இடைநிலை (upper intermediate) அல்லது அதற்கு மேல் தகுதி இருக்க வேண்டும்.
  • ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு பயிற்சி மையத்திலிருந்து (certified safety training centre) முதலுதவி சான்றிதழ்
  • எமிரேட்ஸ் ஐடி மற்றும் வெள்ளை பின்னணியுடன் கூடிய பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

செலவு: ஆங்கிலப் படிப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கு, 7,500 திர்ஹம் செலவாகும். இதில் சேர விரும்பும் எமிரேட்டியர்களுக்கு இலவசமாகும். அத்துடன் இந்த முழு செயல்முறையையும் முடிக்க ஒரு வேலை நாள் ஆகும்.

செயல்முறை:

>> விண்ணப்பதாரர்கள் முதலில் www.tourguidetraining.ae இல் அக்கவுண்ட்டை உருவாக்க வேண்டும். பின் தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்த பிறகு, அவை அங்கீகரிக்கப்பட்டதா இல்லையா என்பதை அறிய 48 மணிநேரம் வரை ஆகும். அவை அங்கீகரிக்கப்பட்டதும், விண்ணப்பதாரர்கள் படிப்பைத் தொடரலாம். திட்டத்தைத் தொடர 750 திர்ஹம் கட்டணம் தேவை.

>> அதன் பின் ‘Dubai Way’ திட்டத்தை முடித்து இறுதி மதிப்பீட்டை (final assessment) முடிக்க வேண்டும். இந்த மதிப்பீட்டை முடித்த பிறகு, விண்ணப்பதாரர்கள் அறிவு மதிப்பீடு (knowledge assessment) (MCQ வகை கேள்விகள்) மற்றும் நேர்காணலுக்கு 1,520 திர்ஹம்ஸ் செலுத்த வேண்டும்.

>> நேர்காணலை முடித்த பிறகு, விண்ணப்பதாரர்கள் திறன் மேம்பாட்டுக்காக 5,250 திர்ஹம் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்திய பிறகு, அவர்கள் திறன் மேம்பாட்டு மதிப்பீட்டைத் (skills development assessment) தொடர்ந்து நடைமுறை மதிப்பீட்டை (practical assessment) முடிக்க வேண்டும்.

>> இரண்டு மதிப்பீடுகளிலும் தேர்ச்சி பெற்ற பிறகு, விண்ணப்பதாரர்கள் ஒரு கருத்துப் படிவத்தை (feedback form) நிரப்ப வேண்டும். சமர்ப்பித்தவுடன், இரண்டு வேலை நாட்களுக்குள் அவர்களின் லைசென்ஸை பெறுவர்.

ஷார்ஜா

ஷார்ஜாவில் இந்த தொழில் விருப்பத்தைத் தொடர முயற்சிப்பவர்களுக்கு, நகரின் வர்த்தகம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டு ஆணையம், 18 வயதுக்கு மேற்பட்ட சுற்றுலா வழிகாட்டிகளாக விண்ணப்பிக்க பல திட்டங்களை வழங்குகிறது. அவை:

  • ஆரம்பநிலைக்கான சுற்றுலா வழிகாட்டுதல் (Tour guiding for beginners)
  • ஆரம்பநிலையில் உள்ளவர்களுக்காக அல் ஜவ்ஹாரா பெண்கள் அதிகாரமளித்தலின் சுற்றுலா வழிகாட்டுதல் (Al Jawhara Women Empowerment tour guiding for beginners) ஆரம்பநிலைக்கு வழிகாட்டுதல்
  • மேம்பட்ட சுற்றுலா வழிகாட்டல் (advanced tourist guide)
  • ஷார்ஜா அருங்காட்சியக ஆணையத்துடன் ரெஹ்லாட்டியுடன் வரலாற்றை ஆராய்தல் (Explore history with Rehlati with Sharjah Museums Authority)
  • Mleiha தொல்பொருள் மையத்துடன் ரெஹ்லாட்டியுடன் பாலைவனத்தை ஆராய்தல் (Explore the desert with Rehlati with Mleiha Archaeological Centre)
  • சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் ஆணையத்துடன் ரெஹ்லாட்டியுடன் இயற்கையை ஆராய்தல் (Explore nature with Rehlati with the Environment and Protected Areas Authority)
  • ஷார்ஜா இன்ஸ்டிடியூட் ஃபார் ஹெரிடேஜுடன் ரெஹ்லாட்டியுடன் பாரம்பரியத்தை ஆராய்தல் (Explore Heritage with Rehlati with Sharjah Institute for Heritage)

தேவைகள்:

  • செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டின் நகல்
  • தங்களுடைய ரெசிடென்ஸி விசாவின் நகலைக் காட்ட வேண்டும்
  • தேசிய அடையாளத்தின் நகல் (முன் மற்றும் பின்)
  • வெள்ளை பின்னணியுடன் தனிப்பட்ட புகைப்படம்
  • புதுப்பிக்கப்பட்ட CV
  • கல்வி தகுதி
  • 3 மாதங்களுக்கு செல்லுபடியாகும் நல்ல நடத்தை சான்றிதழ் (good conduct certificate)

அபுதாபி

அபுதாபியில் சுற்றுலா வழிகாட்டிக்கான லைசென்ஸை பெற, குடியிருப்பாளர்கள் TAMM தளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதன் மதிப்பீடுகள் எமிரேட்டின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறையின் கீழ் வருகின்றன. அமீரக குடிமக்களுக்கு இந்த செயல்முறை இலவசம். அதே நேரம் வெளிநாட்டவர்கள் இதற்காக, 2,700 திர்ஹம் கட்டணம் செலுத்த வேண்டும்.

தேவையான ஆவணங்கள்:

  • எமிரேட்ஸ் ஐடி
  • நல்ல நடத்தை சான்றிதழ் (good conduct certificate)
  • முதலுதவி சான்றிதழ்
  • பாஸ்போர்ட் நகல்
  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
  • ரெசிடென்ஸி விசாவின் நகல்

செயல்முறை:

  • TAMM தளத்திற்குச் சென்று விழிப்புணர்வு அமர்வைப் (awareness session) பார்க்க வேண்டும்
  • அதன் பிறகு, விண்ணப்பதாரர்கள் login செய்து உள்நுழையலாம்
  • பயிற்சிக்கான காலெண்டரை மதிப்பாய்வு செய்து ஒரு குழுவில் சேர வேண்டும்
  • பின் கட்டணம் செலுத்த வேண்டும்
  • பயிற்சியை முடித்த பிறகு மதிப்பீட்டை (assessment) மேற்கொண்டு விண்ணப்பதாரர்கள் சுற்றுலா வழிகாட்டி உரிமத்தைப் பெறலாம்

அஜ்மான்

மற்ற எமிரேட்டுகளை போலவே அஜ்மான் அரசாங்கமும் சுற்றுலா வழிகாட்டிகளுக்கு உரிமம் வழங்கும் முறையை விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் என நிர்ணயித்துள்ளது. புதிய சுற்றுலா வழிகாட்டிகளுக்கு, 3,255 திர்ஹமும், மற்ற எமிரேட்களில் இருந்து உரிமம் பெற்ற சுற்றுலா வழிகாட்டிகளுக்கு, 2,205 திர்ஹமும் செலவாகும்.

தேவையான ஆவணங்கள்:

  • உயர்நிலைப் பள்ளிச் சான்றிதழ் அல்லது அதற்குச் சமமானவை
  • செல்லுபடியாகும் ரெசிடென்ஸ் விசா மற்றும் எமிரேட்ஸ் ஐடி
  • ஆங்கில மொழி தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்று
  • மற்ற எமிரேட்களில் உரிமம் வைத்திருக்கும் வழிகாட்டிகளுக்கு, அவர்கள் ஏற்கனவே உள்ள சுற்றுலா வழிகாட்டி உரிமத்தின் நகலை வழங்க வேண்டும்.

செயல்முறை:

  • சுற்றுலா வழிகாட்டி உரிமத்தைப் பெற ஆர்வமுள்ளவர்கள், அஜ்மான் அரசின் இணையதளத்தில் இ-சிஸ்டம் மூலம் கோரிக்கையைச் சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம்.
  • தேவைகளை பூர்த்தி செய்த பிறகு, அவர்கள் கட்டணத்தை செலுத்த தொடரலாம்.
  • பங்கேற்பாளர்கள் பின்னர் பயிற்சி பெற வேண்டும் மற்றும் அறிவு மதிப்பீட்டை (knowledge assessment) எடுக்க வேண்டும்.
  • மதிப்பீட்டில் தேர்ச்சி பெற்ற பிறகு, ஒரு நாளில் லைசென்ஸ் வழங்கப்படும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!