அபுதாபியிலிருந்து துபாயை நோக்கிய முக்கிய சாலை தற்காலிக மூடல்.. அறிவிப்பை வெளியிட்ட அபுதாபி..!!

அபுதாபியில் இருந்து துபாய் நோக்கி செல்லக்கூடிய ஷேக் மக்தூம் பின் ரஷித் சாலையானது (E11) சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதால் தற்காலிகமாக மூடப்படும் என அபுதாபி அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் அவசர சாலைப் பணியின் காரணமாக ஷேக் மக்தூம் பின் ரஷீத் சாலையானது மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். மூடப்பட்ட பாதைகளின் வரைபடமானது கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.
இதற்கு முன்னதாக, அபுதாபியை நோக்கிய E10 பாதையில் ஒரு பகுதி சாலை மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்திருந்தனர். அதில் ஷேக் சயீத் பின் சுல்தான் சாலையின் மூன்று வலது பாதைகள் ஜூலை 23, காலை 12 மணி முதல் ஆகஸ்ட் 3, அதிகாலை 5 மணி வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதே போல் துபாயிலும் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் எமிரேட்ஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் தாமதத்தை எதிர்பார்க்கலாம் என பயணிகளை எச்சரித்துள்ளது.
இது குறித்து RTA, அதன் சமூக ஊடகங்களில், ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 31, 2024 வரை, அபுதாபியை நோக்கிய ஹத்தா சாலை மற்றும் அல் அய்ன் சாலையின் இன்டர்செக்ஷனுக்கு இடையில் தாமதங்கள் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel